தமிழக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

உள்துறை அமைச்சக உத்தரவில் தெளிவுரை வழங்க வேண்டும் என கோரிக்கை
தமிழக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து: பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழ்த்​தாய் வாழ்த்து உள்​ளிட்ட மாநில வாழ்த்​துப்​பாடல்​கள், மாநில அரசு விழாக்​களின் தொடக்​கத்​தில் பாடப்​படும் வகை​யில், உள்​துறை அமைச்​சகத்​தின் ஆணை​யில் உரிய தெளிவுரை வழங்​கக்​கோரி பிரதமர் நரேந்​திர மோடி​யிடம் முதல்​வர் விஜய் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

டெல்​லி​யில் பிரதமர் மோடியை முதல்​வர் விஜய் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது பிரதமரிடம் அவர் அளித்த கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக அரசும், தமிழக மக்​களும் நாட்​டுப்​பண் மற்​றும் தேசி​யப் பாடலுக்கு உரிய மரி​யாதையை அளித்து வரு​கின்​றனர். தமிழகத்​தில், `தமிழ்த்​தாய் வாழ்த்​து' அரசு நிகழ்ச்​சிகளில் தொடர்ந்து பாடப்​பட்டுவரு​கிறது. கடந்த 1891-ல் ஆண்​டில் மனோன்​மணீ​யம் பெ. சுந்​தரம் பிள்ளை இயற்​றிய `தமிழ்த்​தாய் வாழ்த்​து', தமிழ் மொழி, பண்​பாடு மற்​றும் பாரம்​பரி​யத்​தைப் போற்​றும் ஒரு வாழ்த்​துப் பாடலாகும்.

கடந்த பல்​லாண்​டு​களாக தமிழகம் முழு​வதும் நடை​பெறும் அரசு, கல்​வி, பண்​பாடு மற்​றும் பொது நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் இப்​பாடல் பாடப்​படு​வது மரபாக உள்ளது. தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடல், தமிழகத்​தின் மாநிலப் பாடலாக அறிவிக்​கப்​பட்​டு, மாநிலத்​தி​லுள்ள அரசு அலு​வல​கங்​கள், கல்வி நிறு​வனங்​கள், பல்​கலைக்​கழகங்​கள், பொதுத்​துறை நிறு​வனங்​கள் மற்​றும் பொது நிறு​வனங்​களில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் பாடப்பட வேண்​டும் என தமிழக அரசு முறை​யாக அறி​வித்​துள்​ளது.

உள்​துறை அமைச்​சகத்​தின் ஆணை​யைத் தொடர்ந்​து, வந்தே மாதரம், நாட்​டுப்​பண் மற்​றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்​தாய் வாழ்த்து என்ற வரிசை​முறையை மக்​கள் மாளிகை பின்​பற்றி வரு​கிறது. நாட்​டுப்​பண் பாடப்​பட்ட பிறகு தமிழ்த்​தாய் வாழ்த்​தினைப் பாடும் இந்த வரிசை​முறை, மாநிலத்​தில் நீண்​ட​கால​மாக அரசால் பின்​பற்​றப்​பட்டு வரும் நடை​முறைக்கு மாறாக அமைந்​துள்​ள​தால், தமிழகத்​தின் பல்​வேறு தரப்​பிலிருந்​தும் பொது​மக்​களிடையே பெரும் கவலை​யை​யும் எதிர்ப்​பு​களை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது.

உள்​துறை அமைச்​சகத்​தின் மேற்​படி ஆணை​யைத் தொடர்ந்து இந்த நடை​முறை சில குறிப்​பிட்ட அரசு விழாக்​களில் மாற்​றப்​பட்​டுள்​ளது. உள்​துறை அமைச்​சகத்​தின் ஆணை​யில் மாநில வாழ்த்​துப் பாடலை நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் பாடு​வதற்கு யாதொரு தடை​யும் விதிக்​கப்​பட​வில்​லை. இருந்​தா​லும், அண்​மைக்​காலங்​களில் மக்​கள் மாளி​கை​யில் நடை​பெறும் நிகழ்ச்​சிகளில் தமிழ்த்​தாய் வாழ்த்​துப் பாடல் நிகழ்ச்​சிகளின் இறு​தி​யில் பாடப்​பட்டு வரு​கிறது.

இத்​தகைய சூழலில், தமிழ்த்​தாய் வாழ்த்து உள்​ளிட்ட மாநிலவாழ்த்​துப் பாடல்​கள், மாநில அரசு விழாக்​களின் தொடக்​கத்​தில் பாடப்​படும் வகை​யில் உள்​துறை அமைச்​சகத்​தின் கடந்த ஜன.28-ம் தேதி ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்க ஆவன செய்ய வேண்​டும்.

அத்​தகைய தெளிவுரை, உள்​துறை அமைச்​சகத்​தின் ஆணை​யைத் தமிழகத்​தில் பின்​பற்​றப்​பட்டு வரும் நடை​முறைக்கு இணக்​க​மாக மாற்​று​வதுடன், நிர்​வாக ரீதியி​லான குழப்​பங்​களைத் தவிர்த்​து, தமிழக மக்​களின் கலாச்​சார உணர்​வு​களுக்கு உரிய மதிப்​பளிப்​ப​தாக​வும் அமை​யும். இவ்​விவ​காரத்​தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்​டும்​. இவ்​வாறு கடிதத்​தில்​ முதல்​வர்​ தெரி​வித்​துள்​ளார்​.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in