“ஆட்சியை காப்பாற்ற தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்” - உதயநிதி தாக்கு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

Updated on
1 min read

சென்னை: “டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழக உரிமையை முதல்வர் விஜய் அடகு வைத்துள்ளார்” என சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மேகேதாட்டு அணை கட்ட தமிழகத்தின் அனுமதி கர்நாடகாவுக்குத் தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில், காவிரி விவகாரத்தில் தமிழக உரிமையை கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும், ஆட்சிக் கட்டிலைக் காப்பாற்ற காங்கிரஸுக்கு எதிராக பேசாமலும், தமிழகத்தின் உரிமையை அடகு வைத்துள்ளார் முதல்வர். இந்த பிரச்சினையில், தமிழக அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று ஒன்றிய அரசிடம் மேகேதாட்டுவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென சட்டப்பேரவையில் பேசி இருந்தேன்.

கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில், இந்த சோபா மாடல் முதல்வர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை. விவசாயிகளின் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இனியும் காலம் தாழ்த்தினால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும்.

எனவே, மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>உதயநிதி ஸ்டாலின்</p></div>
“காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியது ஏன்?” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in