தாராபுரத்தில் இன்று முதல்வர் விஜய் பிரச்சாரம்: பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு அனுமதி

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நேற்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நேற்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.

Updated on: 
1 min read

தாராபுரம்: ​தா​ராபுரத்​தில் இன்று நடை​பெறும் தேர்​தல் பொதுக்​கூட்​டத்தில் முதல்​வர் விஜய் பேசுகிறார். இதில் பங்கேற்க 10 ஆயிரம் பேருக்கு மட்​டுமே அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) சட்​டப்​பேரவை தொகுதி இடைத்​தேர்​தல் வரும் அக்​.6-ம் தேதி நடக்​கிறது. தவெக, திமுக, அதி​முக, நாதக, இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் சுயேச்​சைகள் உள்​ளிட்ட 22 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர்.

இந்​நிலை​யில், தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்து கட்​சி​யின் தலை​வரும், தமிழக முதல்​வரு​மான விஜய் இன்று தாராபுரத்​தில் நடை​பெறும் பிரச்சாரப் பொதுக்​கூட்​டத்​தில் பேசுகிறார். இதற்​காக தாராபுரம் - உடுமலை சாலை​யில் அமைந்​துள்ள மாருதி நகர் பகு​தி​யில் சுமார் 54 ஏக்​கர் பரப்​பளவி​லான மைதானம் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது. அங்கு மேடை மற்​றும் பிரம்​மாண்ட பந்​தல் அமைக்​கும் பணி​கள் நிறைவடை​யும் தரு​வா​யில் உள்​ளன.

காவல்​துறை கட்​டுப்​பாடு​கள் மற்​றும் பாது​காப்பு வழி​முறை​களின்​படி, இந்த பொதுக்​கூட்​டத்​தில் 10,000 பேர் மட்​டுமே பங்​கேற்க அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. எனினும், பொது​மக்​கள் மற்​றும் தொண்​டர்​கள் அதி​கள​வில் திரள்​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தால், அசம்​பா​விதங்​களைத் தவிர்க்​கும் பொருட்டு சுமார் 7,000 போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​படுத்​தப்பட உள்​ளனர்.

கூட்​டத்​துக்​கான மின்​வச​தி, குடிநீர், மருத்​து​வக் குழுக்​கள் மற்​றும் போக்​கு​வரத்து மாற்​றங்​கள் தொடர்​பான ஏற்​பாடு​களை மாவட்ட நிர்​வாகம் மற்​றும் காவல்​துறை மேற்​கொண்டு வரு​கிறது.

போக்​கு​வரத்து மாற்​றம்: முதல்​வர் விஜய் இன்று தாராபுரத்​தில் பிரச்​சா​ரம் மேற்​கொள்​வ​தால், லாரி உள்​ளிட்ட கனரக வாக​னங்​களுக்கு மட்​டும் போக்​கு​வரத்து மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. பேருந்​து, கார், இருசக்கர வாக​னங்​கள் வழக்​கம்​போல் தாராபுரம் வரலாம்.

அதன்​படி, ஒட்​டன்​சத்​திரம் வழி​யாக வரும் கனரக வாக​னங்​கள் உடுமலை-பொள்​ளாச்சி வழி​யாக​வும், கரூர் வழி​யாக வரும் கனரக வாக​னங்​கள் பழநி-பொள்​ளாச்சி வழி​யாக​வும் செல்​லலாம். திருப்​பூரில் இருந்து தென்​மாவட்​டங்​களுக்கு செல்​லும் வாக​னங்களுக்கு சில பகு​தி​களில் தற்​காலிக போக்​கு​வரத்து மாற்​றம் செய்ய வாய்ப்பு உள்​ள​தாக போலீ​ஸார் தெரிவித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>தாராபுரத்தில் முதல்வர் விஜய் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் நேற்று பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மேற்கொண்ட போலீஸார்.</p></div>
தமிழகம் முழுவதும் 13 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: அஸ்ரா கார்க்குக்கு கூடுதல் பொறுப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in