‘திமுகவுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்’ - தாராபுரத்தில் முதல்வர் விஜய் பேசியது என்ன?

தாராபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சை கேட்க திரண்டிருந்த கூட்டம்.

தாராபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சை கேட்க திரண்டிருந்த கூட்டம்.

Updated on: 
2 min read

தாராபுரம்: எம்​ஜிஆர், ஜெயலலி​தாவுக்கு துரோகம் செய்​தவர்​களுக்​கும், திமுக​வுக்​கும் இடைத்​தேர்​தலில் மக்​கள் தகுந்த பாடம் புகட்ட வேண்​டும் என தாராபுரத்​தில் முதல்​வர் விஜய் பேசி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் (தனி) தொகுதி இடைத்​தேர்​தல் அக்​.6-ம் தேதி நடை​பெற உள்​ளது. இங்கு தவெக வேட்​பாளர் சத்​ய​பா​மாவை ஆதரித்து நேற்று நடை​பெற்ற பிரம்​மாண்​டப் பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் பேசி​ய​தாவது: தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்​திலேயே கொடுத்த தேர்​தல் வாக்​குறு​தி​களைப் படிப்​படி​யாக நிறைவேற்றி வரு​கிறோம். 717 டாஸ்​மாக் கடைகள் மூடப்​பட்​டுள்​ளன.

200 யூனிட் இலவச மின்​சா​ரம், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை மற்​றும் 65 போதைப்​பொருள் தடுப்​புப்படைகள் அமைக்​கப்​பட்டு நடவடிக்​கை எடுக்​கப்​பட்டுள்ளது. காம​ராஜர் காலை உணவுத் திட்​டம் விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. 13 லட்​சம் விவ​சா​யிகளுக்​குப் பயிர்க்​கடன் தள்​ளு​படி, நெல்​லுக்கு சன்ன ரகத்​துக்கு குவிண்​டாலுக்கு ரூ.2,750, பொது ரகத்​துக்கு ரூ.2,600 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. பால் கொள்​முதல் விலை லிட்​டருக்கு ரூ.6 உயர்த்​தப்​பட்​டு, தாய்மாமன் தங்க மோதிர திட்​ட​மும் தொடங்​கப்​பட்​டது.

பெண்​களுக்​கான இலவசப் பேருந்து ‘வெற்​றிப் பயணம்’ திட்​டம் அக். 2 முதல் நடை​முறைக்கு வரு​ம். ஆண்​டுக்கு 3 இலவச சிலிண்​டர் திட்டம் பொங்​கல் முதல் செயல்​பாட்​டுக்கு வரும். முதலமைச்சரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீடு ரூ.25 லட்​ச​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. மேலும் 630 அம்மா உணவகங்​கள் சீரமைக்​கப்​பட்​டுள்​ளன. நகர்ப்​புற சாலை உள்​கட்​டமைப்​புக்கு ரூ.1,850 கோடி ஒதுக்​கப்​பட்டு பணி​கள் நடை​பெறுகின்​றன. ரூ.1 லட்​சம் கோடி முதலீடுகள் ஈர்க்​கப்​பட்​டன.

திருப்​பூரின் தொழில் வளம் காக்க பருத்​திக்​கான 11 சதவீத இறக்​குமதி வரியை ரத்து செய்ய வைத்​துள்​ளோம். மடத்​துக்​குளத்​தில் புதிய விதை சேமிப்​புக் கிடங்​கு, திருமூர்த்தி அணை​யில் சுற்​றுலாப் பூங்கா மேம்​பாடு, உயிரியல் பாதுகாப்பு ஆய்​வகம் ஆகியவை அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன.

தாராபுரம் தொகு​தி​யில் பல ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்ள இலவச வீட்டு மனைப் பட்​டாக்​கள் வழங்​குதல், ஆனைமலை​யாறு - நல்​லாறு திட்​டம், காவிரி கூட்​டுக் குடிநீர் திட்​டம், நகராட்சி உள்​கட்​டமைப்​புப் பணி​கள் அனைத்​தும் விரைந்து நிறைவேற்​றப்​படும்.

நமக்கு மன்​ன​ராட்சி மனப்​பான்மை கிடை​யாது. மக்​களிடம் சென்று மக்​களு​டன் வாழ்கிறோம். எம்​மத​மும் நம்​மதம் என்​பதே நமது கொள்​கை. அண்​ணா, எம்​ஜிஆர் காலத்​தில் எளிய குடும்​பத்​தைச் சேர்ந்​தவர்​களை தேர்​தலில் நிறுத்​தி, பெரிய மனிதர்​களை வீழ்த்​தி​யது போல, தற்​போதும் எளிய மனிதர்​களைக் கொண்டு குறுநில மன்​னர்​களை மக்​கள் வீழ்த்தி தவெகவை ஆட்சி​யில் அமர்த்​தி​யுள்​ளனர்.

கொளத்​தூர் மக்​களே வாக்​களிக்​க​வில்லை என்று மேடை​யில் ஒப்​புக்​கொண்ட திமுக தலைவர், தற்​போது நம்மை ஒரு​மை​யில் பேசி வரு​கிறார் எந்த அளவுக்​குத்தரம் தாழ்த்திப் பேசுகிறார் களோ, அந்த அளவுக்கு மக்​கள் நம்மை உயர்த்து​வார்​கள். திமுக​வின் ‘பி’ டீமாகச் செயல்​படும் சில கட்​சிகள், எம்​ஜிஆரை​யும் ஜெயலலி​தாவை​யும் மறந்​து​விட்டு திமுக​வுடன் மறை​முகக் கூட்டு வைக்​கின்​றன.

அதைஏற்க முடி​யாமல் தான் உண்​மை​யான விசு​வாசி​யான சகோ​தரி சத்​ய​பாமா எம்​எல்ஏ பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைந்​தார். எம்​ஜிஆருக்​கும் ஜெயலலி​தாவுக்​கும் துரோகம் இழைத்​தவர்​களுக்​கும், திமுக​வுக்​கும் மக்​கள் பாடம் புகட்ட வேண்​டும். தாராபுரம் வேட்​பாளர் சத்​ய​பா​மாவுக்கு விசில் சின்​னத்​தில் வாக்​களித்து வெற்றி பெறச் செய்ய வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் விஜய் பேசி​னார்​.

6 கி.மீ. ரோடு ஷோ: ​முன்னதாக பிரச்​சா​ரத்​துக்​காக நேற்று மதி​யம் 12.30 மணிக்கு விமானத்​தில் கோவை வந்த முதல்​வர் விஜய், வேனில் அமர்ந்​த​படி தாராபுரம் நோக்கி புறப்​பட்​டார். பொதுக்​கூட்​டம் நடைபெறும் மாருதி நகருக்கு மாலை 3.45 மணிக்கு வந்​தடைந்​தார். காங்​க​யம் பிரி​வில் இருந்து பொதுக்​கூட்ட மேடை வரை​ 6 கிமீ ரோடு ஷோவிலும் ஈடு​பட்​டார். திறந்​தவேனில் ​மக்​களை நோக்​கி கையசைத்​த​படி சென்​றார்​.

<div class="paragraphs"><p>தாராபுரம் தொகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சை கேட்க திரண்டிருந்த கூட்டம்.</p></div>
“நாட்டின் விடிவெள்ளியாக முதல்வர் விஜய்...” - அமைச்சர் செங்கோட்டையன் @ தாராபுரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in