சீனாவில் நடந்த உலகத்திறன் போட்டியில் வென்றோருக்கு முதல்வர் ஊக்கத்தொகை வழங்கினார்

சீனாவின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்ற உலகத்​திறன் போட்​டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்​தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல்​வர் விஜய் ஊக்​கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

சீனாவின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்ற உலகத்​திறன் போட்​டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்​தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல்​வர் விஜய் ஊக்​கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

Updated on: 
2 min read

சென்னை: சீனாவின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்ற உல​கத்​திறன் போட்​டிகளில் பதக்​கம் வென்​றவர்​கள், போட்​டி​யில் பங்​கேற்​றவர்கள் என தமிழகத்​தைச் சேர்ந்த 12 பேருக்கு ரூ.49 லட்​சத்​துக்​கான ஊக்​கத் தொகை வழங்கி முதல்​வர் விஜய் பாராட்​டினார்.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: சீனாவின் ஷாங்​காய் நகரில் 68 நாடுகள் பங்​கேற்ற 48-வது உல​கத் திறன் போட்​டிகளில், 6 வெள்​ளிப் பதக்​கங்​கள் மற்​றும் 20 சிறப்​புத் தகுதிப் பதக்​கங்​களை (Medal for Excellence) வென்று இந்தியா 10-வது இடத்​தைப் பிடித்​தது. மொத்​தம் 63 திறன் பிரிவு​களில் களம் கண்ட 70 பேர் கொண்ட இந்​திய அணி​யில், தமிழகத்​தி​லிருந்து 12 பேர் பங்​கேற்​றனர். இவர்​களில் 5 பேர் சர்​வ​தேச அளவில் பதக்​கங்​களை வென்​றுள்​ளனர்.

இப்​போட்​டிகளில் டென்​டல் புராஸ்தெடிக்ஸ் பிரி​வில் ஜா.முகமது சலாம் வெள்​ளிப் பதக்​கமும், இன்​டலிஜன்ட் செக்​யூரிட்டி டெக்​னாலஜி பிரி​வில் தகா.பா.ராகுல், மொபைல் அப்​ளி​கேஷன்ஸ் டெவலப்​மென்ட்​டில் சு.வி.அர்​ஜுன், பிளாஸ்டரிங் அண்டு டிரைவால் சிஸ்​டம்ஸ் பிரி​வில் ம.சுரேந்திரன், ஜூவல்​லரி பிரி​வில் ஜாய்தாஸ் ஆகியோர் சிறப்​புத் தகுதிப்பதக்​கங்​களை​யும் வென்​றனர்.

இந்​தப் போட்​டிகளில் பதக்​கங்​கள் வென்ற மற்​றும் பங்​கேற்ற தமிழக போட்​டி​யாளர்​களைச் சிறப்​பிக்​கும் வகை​யில் வெள்​ளிப் பதக்​கம் வென்ற ஜா.முகமது

சலாமுக்கு ரூ.15 லட்​சம், சிறப்புத் தகுதிப் பதக்​கங்​களை வென்ற நால்​வருக்​கும் தலா ரூ.5 லட்​சம், போட்​டிகளில் பங்​கேற்ற 7 பேருக்​கும் தலா ரூ.2 லட்​சம் என 12 பேருக்கு மொத்​தம் ரூ.49 லட்​சம் ஊக்​கத் தொகைக்​கான காசோலைகளை முதல்​வர் விஜய் நேற்று வழங்கி பாராட்​டினார்.

இப்​போட்​டிகளில் பள்​ளி​கள், கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​கள், பொறி​யியல் கல்​லூரி​கள், பாலிடெக்​னிக் கல்​லூரி​கள், தொழிற்​பயிற்சி நிலை​யங்​கள், ஓட்​டல் மேனேஜ்​மென்ட், மருத்​து​வம் மற்​றும் துணை மருத்​து​வப் படிப்​பு​கள் பயிலும் மாணவ, மாணவியர் மற்​றும் பணிபுரியும் இளைஞர்​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​கலாம்.

உல​கத் திறன் போட்​டிகள் குறித்த விவரங்​களைத் தமிழ்​நாடு திறன் மேம்​பாட்டு கழகத்​தின் உதவி எண்​கள் 9962220527 மற்​றும் 9962220528 ஆகிய​வற்​றைத்தொடர்பு கொண்​டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணை​யதளம் மூலமாகவும் அறிய​லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்​வில், தலை​மைச் செயலர் மு.சாய்​குமார், சிறப்​புத்திட்​டச் செய​லாக்​கத் துறை செயலர் சோ. மது​மதி, திறன் மேம்​பாட்​டுக் கழக எம்டி கவிதா ராமு பங்கேற்றனர்.

முதல்வர் கோப்பை பரிசளிப்பு: தமிழகத்​தில் ஆண்​டுதோறும் முதல்​வர் கோப்பை விளை​யாட்டு போட்​டிகள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. அந்​தவகை​யில் நடப்​பாண்​டுக்​கான போட்​டிகள் நடைபெற்​றன. இவற்​றில் வெற்றி பெற்​றவர்​களுக்​கான மாநில அளவி​லான இறுதிப் போட்​டிகள் இன்​றுடன் நிறைவு பெறுகின்றன.

வெற்றி பெற்ற அணிகள் மற்​றும் வீரர்​களுக்​கான பரிசளிப்பு விழா நாளை (அக். 29) சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் நடை​பெறவுள்​ளது. இதில் முதல்​வர் விஜய் பங்​கேற்று, வெற்றி பெற்றோருக்கு ரூ.17 கோடியே 4 லட்​சத்து 25 ஆயிரம் மதிப்​பிலான பரிசுத்​தொகையையும், பதக்​கங்​களை​யும் வழங்​கு​கிறார்.

<div class="paragraphs"><p>சீனாவின் ஷாங்​காய் நகரில் நடை​பெற்ற உலகத்​திறன் போட்​டிகளில் பதக்கம் வென்ற தமிழகத்​தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல்​வர் விஜய் ஊக்​கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.</p></div>
ஆவின் நெய் உள்ளிட்ட 67 பொருட்களின் விலை உயர்வு - கட்சித் தலைவர்கள் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in