சென்னையில் 29, 30-ம் தேதிகளில் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on
1 min read

சென்னை: ​மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல்​துறை அதி​காரி​கள் மாநாடு முதல்​வர் விஜய் தலை​மை​யில் சென்​னை​யில் ஜூன் 29, 30-ம் தேதி​களில் நடை​பெறுகிறது.

தமிழகத்​தின் சட்​டம் ஒழுங்கு நில​வரம், அரசின் திட்​டங்​கள் செயல்​பாடு குறித்து ஆண்​டு​தோறும் முதல்​வர் தலை​மை​யில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மாநாடு நடை​பெறும். அந்​த வகை​யில், மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல்​துறை அதி​காரி​கள் மாநாடு சென்னை தலை​மைச் செயல​கத்​தில் ஜூன் 29, 30-ம் தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதில் அனைத்து துறை​களின் செயலர்​கள், மாவட்ட ஆட்​சி​யர்​கள், காவல் கண்​காணிப்​பாளர்​கள் உள்​ளிட்ட அதி​காரி​கள் பங்​கேற்​கின்​றனர். புதி​தாக ஆட்​சிப் பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு அமைந்து பல்​வேறு துறை​களின் அதி​காரி​கள் சமீபத்​தில் அடுத்​தடுத்து மாற்​றப்​பட்​டனர். இந்​நிலை​யில் இந்த மாநாடு நடத்​தப்பட உள்​ளது.

மாநாட்​டில், மாவட்ட நிர்வாகம், சட்​டம்- ஒழுங்கு நிலை, மாநிலத்​தின் வளர்ச்​சித் திட்​டங்​கள், திட்​டங்​களை செயல்​படுத்​தும் நடை​முறை​கள், அரசு நிர்​வாகத்​தில் புதிய தொழில்​நுட்ப பயன்​பாடு உள்பட பல்​வேறு விஷ​யங்​கள் குறித்து முதல்​வர் விஜய் விரி​வான ஆய்வு மேற்​கொள்​வார். அத்​துடன், திட்​டங்​கள் தொடர்பாகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பல்​வேறு அறிவுறுத்​தல்​களை​யும், உத்​தர​வு​களை​யும் அப்போது முதல்வர் வழங்​கு​வார்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய் </p></div>
“மாணவர் கொல்லி நீட் தேர்வை ஒழிப்பது மட்டும்தான் ஒரே தீர்வு” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in