திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகள் அளித்த முதல்வர் ஸ்டாலின்!

திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகள் அளித்த முதல்வர் ஸ்டாலின்!
Updated on
1 min read

சென்னை: “அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் ஆகிய நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”அஞ்சாமை, மனிதநேயம், அறிவாற்றல், ஊக்கமளித்தல் – வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!

”அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்

எஞ்சாமை வேந்தர்க் கியல்பு” என்ற குறளை மேற்கோள் காட்டி, வான் புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாளில், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்!

”சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல், வறியோர், எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டடங்கள், இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள், தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டுக்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.

இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி!” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்ந்து, முதல்வர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!

அறம்-பொருள்-இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் தினத்தில் தமிழக மக்களுக்கு 4 வாக்குறுதிகள் அளித்த முதல்வர் ஸ்டாலின்!
தேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக அறிமுகமாகும் ‘எல்லம்மா’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in