டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறக்க முதல்வர் வருகை?

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திடீர் ஆய்வு
மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் எஸ்பி குத்தாலிங்கம்.

மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் எஸ்பி குத்தாலிங்கம்.

Updated on
1 min read

மேட்டூர்: மேட்​டூர் அணை​யின் நீர்​மட்​டம் 88 அடியை எட்​டிய நிலை​யில், காவிரி டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையை திறந்து வைக்க முதல்​வர் விஜய் வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இதையொட்டி அணை​யில் பாது​காப்பு மற்​றும் முன்​னெச்​சரிக்கை ஏற்​பாடு​கள் குறித்து மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

மேட்​டூர் அணை​யில் இருந்து ஆண்​டு​தோறும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்​துக்கு தண்​ணீர் திறப்​பது வழக்​கம். இதன்​மூலம் சேலம், ஈரோடு, நாமக்​கல், திருச்​சி, தஞ்​சாவூர், திரு​வாரூர் உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் சுமார் 17 லட்​சம் ஏக்​கர் நிலங்​கள் பாசன வசதி பெறும். இந்த ஆண்டு போதிய நீர் இருப்பு இல்​லாத​தால் ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​பட​வில்​லை.

தற்​போது காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களில் பெய்து வரும் மழை​யால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​து, நீர்​மட்​டம் 88 அடியை எட்​டி​யுள்​ளது. விரை​வில் 90 அடியை எட்​டும் என எதிர்​பார்க்​கப்​படும் நிலை​யில், அணை திறப்பு குறித்து சட்​டப்​பேர​வை​யில் கேள்வி எழுந்​த​போது நீர்​வளத்​துறை அமைச்​சர் என்​.ஆனந்த் விரை​வில் நல்ல செய்தி அறிவிக்​கப்​படும் என தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், முதல்​வர் விஜய் மேட்​டூர் அணைக்கு வந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்​ணீர் திறக்க உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. எனவே முன்​னேற்​பாடாக சேலம் மாவட்ட எஸ்பி குத்​தாலிங்​கம் மேட்​டூர் அணை​யில் நேற்று ஆய்வு மேற்​கொண்​டார்.

அணை​யின் வலது கரை, மேல்​மட்ட மதகில் மின் விசையை இயக்​கும் பகுதி உள்​ளிட்​ட​வற்றை பார்​வை​யிட்​டு, பாது​காப்பு மற்​றும் முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை ஆய்வு செய்​தார். ஆய்​வின்​போது நீர்​வளத்​துறை செயற்​பொறியாளர் செல்​வ​ராஜ், உதவி பொறி​யாளர்​கள் சதீஷ், பிர​சாந்த், டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

விநாடிக்கு 10,807 கனஅடி: மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் காலை விநாடிக்கு 13,415 கனஅடி​யாக​வும், மாலை​யில் 12,231 கனஅடி​யாக​வும், நேற்று காலை 12,534 கனஅடி​யாக​வும் நீர்​வரத்து பதி​வானது. மாலை​யில் 10,807 கனஅடி​யாக சரிந்​தது.

அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்டு வரு​கிறது. நீர் வெளி​யேற்​றத்​தை​விட, நீர்வரத்​து அ​தி​க​மாக உள்​ள​தால் அணை​யின் நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. தற்போது அணை​யின் நீர்​மட்டம் 88.43 அடி​யாக​வும், நீர் இருப்பு 50.87 டிஎம்​சி​யாகவும் உள்​ளது.

<div class="paragraphs"><p>மேட்டூர் அணை வலது கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சேலம் எஸ்பி குத்தாலிங்கம்.</p></div>
வெற்றி நோட்புக் முதல் வெற்றி உப்பு வரை: தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட 23 அறிவிப்புகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in