காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி
Updated on
1 min read

சென்னை: ​காவலர் தினத்தை முன்​னிட்டு பெசன்ட் நகர் கடற்​கரை​யில் நடை​பெற்ற தூய்​மைப் பணியை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் கிடந்த குப்​பைகளை அகற்றி தூய்​மைப்​படுத்​தி​னார். இதில், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.

கடந்த 1859-ம் ஆண்​டில் மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டு, நவீன மற்​றும் அமைப்பு ரீதி​யான காவல்​துறை தோற்​று​விக்​கப்​பட்ட செப்​டம்​பர் 6-ஆம் நாள் ஆண்​டு​தோறும் 'காவலர் தின​மாக' கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பெசன்ட் நகர் கடற்​கரையை தூய்​மைப்​படுத்​தும் நிகழ்ச்சி நேற்று காலை நடை​பெற்​றது.

காவல் ஆணை​யர் அமல்​ராஜ் தொடங்கி வைத்து தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டார். போலீஸ் அதி​காரி​கள், ஊர்க்​காவல் படை வீரர்​கள், மாநக​ராட்சி ஊழியர்​கள் மற்​றும் என்​சிசி, என்​எஸ்​எஸ் கல்​லூரி மாணவ மாணவி​கள் என 1,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். இதனைத் தொடர்ந்​து, காவலர் தினக் கொண்​டாட்​டத்​தின் தொடர்ச்​சி​யாகப் பல்​வேறு சிறப்​பான நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.

காவல்​துறை இசைக்​குழு மற்​றும் பேக்​-பைப்​பர் இசைக்​குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. சென்​னை​யின் முக்​கிய சந்​திப்​பு​களில் உள்ள எல்​இடி, எல்​சிடி திரைகளில் 'காவலர் தினம்' குறித்த வாழ்த்​துச் செய்​தி​கள் மற்​றும் விழிப்​புணர்வு காட்​சிகள் ஒளிபரப்​பப்​பட்​டன.

மேலும், சென்​னை​யின் 4 காவல் மண்​டலங்​கள் மற்​றும் 12 மாவட்​டங்​களில் உள்ள குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களு​டன் இணைந்து போதைப்​பொருள் ஒழிப்​பு, சைபர் குற்​றத் தடுப்பு மற்​றும் பாது​காப்பு குறித்த சிறப்பு விழிப்​புணர்வு முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.

இந்​நிகழ்ச்​சி​யில் சென்னை காவல் கூடு​தல் ஆணை​யர்​கள் ஏ.ஜி. பாபு (தலை​மை​யிடம்), கே. எஸ்​.நரேந்​திரன் நாயர் (தெற்​கு), தெற்கு மண்டல இணை ஆணை​யர் விஜயகு​மார், துணை ஆணை​யர்​கள் கார்த்​தி​கேயன் (அடை​யார்), குமார் (தி.நகர்), சீனி​வாசன் (புனித தோமையர் மலை), ஜெயகரன் (ஆயுதப்​படை), ராதாகிருஷ்ணன் (மோட்​டார் வாகனப் பிரிவு) உள்​ளிட்ட பல உயர் அதி​காரி​கள் கலந்​து​கொண்​டனர்.

நிகழ்ச்​சி​யின் இறு​தி​யில் பேசிய காவல் ஆணை​யர், "கடற்​கரையை அசுத்​தப்​படுத்​தாமல் தூய்​மை​யாக​வும், சுத்​த​மாக​வும் வைத்​திருக்க வேண்​டிய பொறுப்பு பொது​மக்​கள் ஒவ்​வொரு​வருக்​கும் உள்​ளது.

எனவே, கடற்​கரைக்கு வரு​வோர் குப்​பைகள் மற்​றும் பிளாஸ்​டிக் கழி​வு​களை கண்ட இடங்​களில் வீசாமல், அதற்​கென வைக்​கப்​பட்​டுள்ள குப்​பைத் தொட்​டிகளில் மட்​டுமே போட வேண்​டும்​" என வேண்​டு​கோள்​ விடுத்​தார்​.

காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணி
விஜய் பிரதமர் வேட்பாளரா? - கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது: எம்பி சசிகாந்த் செந்தில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in