எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழர்கள் - கிராம மக்கள் இடையே மோதல் - நடந்தது என்ன?

நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு; வட்டாட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.

Updated on
1 min read

கோவில்பட்டி: எட்​டயபுரம் அருகே குளத்​துள்​வாள்​பட்​டி​யில் கிராம மக்​களுக்​கும், இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. கற்​களை வீசி எறிந்து தாக்​குதலில் ஈடு​பட்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

எட்​டயபுரம் அருகே சுரைக்​காய்​பட்டி ஊராட்​சிக்கு உட்​பட்ட குளத்​துள்​வாய்​பட்டி கிராமத்​தில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாமில் 44 வீடு​கள் அமைந்​துள்​ளன. கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு இலங்கை தமிழர் முகாமில் உள்​ளவர்​களுக்கு அரசு சார்​பில் வீடு​கள் கட்​டிக் கொடுக்​கப்​பட்​டன. அதன் பின்​னர் குளத்​துள்​வாய்​பட்டி கிராம மக்​கள் தங்​களது விவ​சாய நிலங்​களுக்கு செல்​வ​தில் பிரச்​சினை உரு​வானது.

இலங்கை தமிழர் முகாமில் உள்​ளவர்​களை கண்​காணிக்க வேண்​டும். இப்​பகு​தி​யில் போதைப் பொருள் நடமாட்​டம் அதி​க​மாக உள்​ள​தால், குளத்​துள்​வாய்​பட்​டி​யில் புறக்​காவல் நிலை​யம் அமைக்க வேண்​டும் என கிராம மக்​கள் கோரிக்கை விடுத்து வரு​கின்​றனர். ஆனால், வட்​டாட்​சி​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் தரப்​பில் எந்​தவொரு தீர்​வும் எட்​டப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் விளை நிலங்​களுக்கு செல்​வதற்​கான பாதை​யில் கிராம மக்​கள் சரளை மண் கொட்டி சமப்​படுத்​தினர். இதற்கு முகாமைச் சேர்ந்​தவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்​தனர். இதையடுத்து நேற்று காலை கிராம மக்​கள் திரண்டு முகாமில் உள்ள வீடு​களை முற்​றுகை​யிடச் சென்​றனர். அப்​போது கிராம மக்​களுக்​கும், முகாமைச் சேர்ந்​தவர்​களுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஒரு கட்​டத்​தில் இரண்டு தரப்​பினரும் கற்​களை வீசி தாக்​குதலில் ஈடு​பட்​டனர். இதனால் பரபரப்பு ஏற்​பட்​டது.

தகவல் அறிந்து டிஎஸ்பி-க்​கள் சுந்​தர​பாண்​டியன், ஜெக​நாதன், காவல் ஆய்​வாளர்​கள் மணி​கண்​டன், உமா மகேஸ்​வரி மற்​றும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். தொடர்ந்து வட்​டாட்​சி​யர் சுபா மற்​றும் வரு​வாய்த்​துறை​யினர் அங்கு வந்து இருதரப்​பினரிட​மும் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

எனினும், நேற்று மாலை வரை பிரச்​சினை முடிவுக்கு வரவில்லை. இருதப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவர்களிடம் தொடர்ந்து வரு​வாய்த்​துறையினரும், போலீஸாரும் பேச்​சு​ நடத்தி வரு​கின்​றனர்​.

<div class="paragraphs"><p>போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர்கள்.</p></div>
“சுயநலத்துக்காக தமிழக உரிமைகளை காவு கொடுக்க துணிந்த பழனிசாமி” - முதல்வர் ஸ்டாலின் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in