ரூ.542 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

ரூ.542 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
Updated on
2 min read

சென்னை: சு​கா​தா​ரம், குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை சார்​பில் ரூ.542.05 கோடி மதிப்​பிலான புதிய கட்​டிடங்​களை முதல்​வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்​து​வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நேற்று முன்​தினம் (பிப்​.16) நடைபெற்ற நிகழ்​வில் சுகா​தா​ரத் துறை சார்​பில், ரூ.100 கோடி செலவில் தரம் உயர்த்​தப்​பட்ட ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவ​மனையை முதல்​வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்​து​வைத்​தார்.

மேலும் சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.65 கோடி செல​வில் கட்​டப்​பட்​டுள்ள நரம்பியல் பிரிவுக் கட்​டிடம், தமிழ்​நாடு அரசு பல் மருத்​து​வக் கல்​லூரி மற்​றும் மருத்​து​வ​மனை​யில் ரூ.64.09 கோடி​யில் கட்​டப்​பட்ட கூடு​தல் கட்​டிடங்​கள், கீழ்ப்​பாக்​கம் அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.40 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள ஒப்​புயர்வு மையக் கட்​டிடம், ராயபுரம், அரசு ஆர்​எஸ்​ஆர்​எம் மகப்​பேறு மருத் துவ​மனை​யில் ரூ.31.74 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள ஒருங்​கிணைந்த அவசர​கால மற்​றும் பச்​சிளம் குழந்தை பராமரிப்பு மையத்​துக்​கான கூடு​தல் கட்டி டம் மற்​றும் ரத்த வங்​கி, நவீன ரத்​தக் கூறு பிரிப்பு அலகு ஆகியவற்​றை​யும் திறந்​து​வைத்​தார்.

இதுத​விர, திருக்​கு​வளை அரசு மருத்​து​வ​மனை​யில் ரூ.3.50 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள தாய்​சேய் நலக் கட்​டிடம், வேதா​ரண்​யம் அரசு மாவட்ட தலைமை மருத்​து​வ​மனை​யில் ரூ.13.40 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள கூடு​தல் கட்​டிடம் என ரூ.317.73 கோடி மதிப்​பிலான கட்​டிடங்​களை திறந்​து​வைத்​தார்.

குறு, சிறு தொழில்​கள் துறை: குறு, சிறு மற்​றும் நடுத்​தரத் தொழில் நிறு​வனங்​கள் துறை​யின் தமிழ்​நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறு​வனம் (சிட்​கோ) சார்​பில், சென்​னை, கிண்டி தொழிற் பேட்​டை​யில் தமிழ்​நாடு சிறு தொழில் நிறு​வனத்​துக்​காக (டான்​சி) ரூ.175 கோடி செல​வில் 263 தொழிற்​கூடங்​கள் கொண்ட அடுக்​கு​மாடி தொழில் வளா கத்தை திறந்து வைத்​தார்.

மேலும், ரூ.32.33 கோடி​யில் சேலம் - நெய்​காரப்​பட்​டி​யில் பட்டு நூல் குழு​மம், விருதுநகர் ராஜ​பாளை​யத்​தில் மகளிருக்​கான நெசவுக் குழு​மம், தேனி – திம்​மி​நாயக்​கன்​பட்​டி​யில் செயற்​கைப் பட்​டுக் குழு​மம், சென்னை – பூங்கா நகர் மற்​றும் திருநெல்​வேலி – மீனாட்​சிபுரத்​தில் தங்​க நகைக் குழு​மங்​கள் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் திறந்​து​வைத்​தார்.

இதுத​விர, தொழில் ஆணை​யர் மற்​றும் தொழில் வணிக இயக்​குநரகம் மூலம் ரூ.16.99 கோடி செல​வில் கோயம்​புத் தூர் – பொள்​ளாச்​சி​யில் கயிறு குழு​மம், வேலூர் - பென் னாத்​தூரில் தேன் பதப்​படுத்​துதல் குழு​மம் மற்​றும் கரூர் - புக ளூரில் கயிறு குழு​மம் ஆகிய​வற்​றை​யும் முதல்​வர் ஸ்டாலின் திறந்​து​வைத்​தார்.

அதைத்​தொடர்ந்​து, சிட்கோ நிறு​வனத்​தின் லாபத்​தில், அரசின் ஈவுத் தொகை​யான ரூ.7 கோடியே 30 லட்​சத்து 59 ஆயி ரத்து 300-க் கான காசோலையை முதல்​வர் ஸ்டா​லினிடம் துறை​யின் அமைச்​சர் தா.மோ. அன்​பரசன் வழங்​கி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பர சன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, தலை​மைச்​செயலர்​ ​நா.​முரு​கானந்​தம்​, சு​கா​தா​ரத்​துறை செயலர்​ செந்​தில்​கு​மார்​, துறை​களின்​ செயலர்​கள்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​. இவ்​​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

ரூ.542 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்
மார்ச்​ 1-ல்​ மதுரையிலும், 6-ம்​ தேதி வேலூரிலும்​ நடைபெறும்​ பிரச்சாரக் கூட்டத்தில்​ பிரதமர்​ மோடி பங்கேற்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in