தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்

தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்
Updated on
1 min read

சென்னை: தமிழின் இனிமை​யை​யும், தமிழரின் உயர்​வுக்​கான வழியை​யும் தன் கவிதை​யால் காட்​டிய​வர் கவிஞர் பார​தி​தாசன் என்று அவரது 136-வது பிறந்​த​நாளை​யொட்டி முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் புகழாரம் சூட்​டி​யுள்​ளனர்.

பாவேந்​தர் பார​தி​தாசன் 136-வது பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்னை மெரினா கடற்​கரை, காம​ராஜர் சாலை​யில்உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்​பில் தமிழ் வளர்ச்​சித் துறை செயலர் வே.​ராஜா​ராமன் உள்​ளிட்ட அதி​காரி​கள் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர்.

அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

முதல்​வர் ஸ்டா​லின்: தமிழின் இனிமை​யை​யும், தமிழரின் உயர்​வுக்​கான வழியை​யும் தன்கவிதை​யால் காட்​டிய​வர் கவிஞர் பாரதிதாசன்.

பாவேந்​தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்​துக்கு துணை நிற்​கட்​டும். தமிழ் எனும் ஆயுதமேந்தி இன மானம் உரைத்த பாவேந்​தர் புகழ் வாழிய​வே.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: தமிழர்​களின் சுயமரி​யாதை உணர்​வை, தமது தீப்​பொறி வரி​களால் தட்டி எழுப்​பிய கவிஞர் பார​தி​தாசனின் பிறந்​த​நாள்.

இனப் பகைவர்​களின் சூழ்ச்​சிகளை கூரிய வரி​களால் தோலுரித்​து, தமிழ் இனத்தை எழுச்சி கொள்​ளச் செய்த பாவேந்​தரின் பாடல்​கள் ஆதிக்​கத்​துக்கு எதி​ரான திரா​விட இயக்​கத்​தின் போர்க்​குரல்.

காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: இளைஞர்​களுக்கு விழிப்​புணர்வை அளிக்​கும் தீப​மாக​வும், சமூக மாற்​றத்​துக்கு ஊக்​கமளிக்​கும் சக்​தி​யாக​வும் தமிழின் பெரு​மையை உலகம் முழு​வதும் பரப்​பிய ஒளி​யாக பார​தி​தாசன் என்​றும் நிலைத்​திருப்​பார். அவரது சிந்​தனை​களை நினை​வு​கூர்​வதுடன், அவற்றை நம் வாழ்க்​கை​யிலும் நடை​முறைப்​படுத்​து​வோம்.

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: பாடல்​களால் மக்​களிடம் தமிழ் உணர்வை ஊட்​டி, தமிழின் தொன்​மை, பெரு​மையை உலக அரங்​கில் உயர்த்​திப் பிடித்​தவர் கவிஞர் பார​தி​தாசன்.

எங்​கும் தமிழ், எதி​லும் தமிழ் என உரக்க முழங்கி தமிழ் ஆசிரியர், கவிஞர், எழுத்​தாளர் என பல வழிகளி​லும் தமிழ் மொழி​யின் இனிமையை எடுத்​துரைத்த பார​தி​தாசனின் தமிழ்ப் பணியை எந்​நாளும் போற்றி வணங்​கு​வோம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழர் உயர்வுக்கு வழிகாட்டியவர் பாரதிதாசன்: 136-வது பிறந்தநாளில் முதல்வர், தலைவர்கள் புகழாரம்
சிறைபிடிக்கப்பட்ட இலங்கை கடற்கொள்ளையர் யார்? - போலீஸார் விசாரணையில் முக்கிய தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in