பருவநிலை மாற்றத்தால் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி அதிகரிப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: பரு​வநிலை மாற்​றத்​தால் ‘மெட்​ராஸ் ஐ’ பாதிப்பை தொடர்ந்து சின்​னம்​மை, பொன்​னுக்கு வீங்கி அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளன.

குளிர்​காலம் முடிந்து வெயில் அதி​கரித்து வரும் பரு​வநிலை மாற்​றத்​தால், குழந்​தைகள் முதல் பெரிய​வர்​கள் வரை அதி​கள​வில் ‘மெட்​ராஸ் ஐ’ எனப்​படும் கண்நோயால் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். சென்னை எழும்​பூர் அரசுகண் மருத்​து​வ​மனை உட்பட தனி​யார் மருத்​து​வ​மனைகளுக்கு மெட்​ராஸ் ஐ பாதிப்​புடன் சிகிச்​சைக்கு வருபவர்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளன. மற்​றொரு புறம், சின்​னம்​மை, மம்ப்ஸ்என்ற பொன்​னுக்கு வீங்கி பாதிப்பு அதி​கரிக்​கத் தொடங்​கி​யுள்​ளன.

சின்​னம்மை நோய் எளி​தில் பரவும் வைரஸ் தொற்று ஆகும். இது காய்ச்​சல், சோர்​வு, தளர்ச்​சி,பசி​யின்மை ஆகிய அறிகுறிகளு​டன் தொடங்​கி, பிறகு உடலில் சிறிய நீர் திவளை​கள் போன்ற கொப்​புளங்​களு​டன் பாதிப்பை ஏற்​படுத்​துகிறது. அதேபோல் பொன்​னுக்கு வீங்கி பாதிப்​பால், கன்னப்​பகு​திக்​குக் கீழே, கழுத்​தின் ஒரு புறத்​திலோ, இரு புறங்​களி​லுமோ வீக்​கம் ஏற்​படும்.

இது தொடர்​பாக அரசு மருத்​து​வர்​களிடம் கேட்​ட​போது, “சின்​னம்​மையை பொருத்​தவரை​யில், கர்ப்​பிணி​கள், பச்​சிளம் குழந்​தைகள், நோய் எதிர்ப்​பு சக்தி குறைந்​தவர்​கள் ஆகியோ​ருக்கு தீவிர பாதிப்பு ஏற்​படுத்​தும். பொன்​னுக்கு வீங்​கி, கணை​யத்தை தாக்கி அதீத வயிற்று வலி ஏற்​படுத்​தும். பெண் குழந்​தைகளுக்​கு, சினைப்​பையை தாக்கி அழற்​சியை ஏற்​படுத்​து​வதுடன், அடிவ​யிற்​றுப் பகு​தி​யில் தீவிர வலியை ஏற்​படுத்​தும்.

ஆண்​களின் விந்​தணு உற்​பத்தி உறுப்​பில் அழற்​சியை ஏற்​படுத்தி வலியை உண்​டாக்​கும். கழுத்​துப் பகுதி இறுக்​கம், அதிக தலை​வலியை ஏற்​படுத்​தலாம். இரு​மல், தும்​மல் மூல​மாக மற்​றவர்​களுக்கும் பரவும் என்​ப​தால், பொது இடங்​கள், பள்​ளி​கள் போன்​றவற்​றில், முகக்​கவசம் அணிதல், அடிக்​கடி கைகளைக் கழு​வுதல் போன்​றவற்றை கடைபிடிக்க வேண்​டும். பாதிக்​கப்​பட்​டவர்கள், ஒரு வாரம் தனிமைப்​படுத்​திக் கொள்ள வேண்​டும்” என்​றனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதே 2026 தேர்தல்!” - திருச்சி மாநாட்டில் மு.க.ஸ்டாலின் முழக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in