இன்று சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்

இன்று சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இயக்கப்படும் 3 மின்சார ரயில்களின் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில் அரக்கோணம் யார்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், ரயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு இன்று (26-ம் தேதி) இரவு 10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - சென்னை சென்ட்ரலுக்கு இன்று இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணத்துக்கு இன்று இரவு 10.55 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், திருவாலங்காடு - அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இத்தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் சேவை மாற்றம்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல, மகர விளக்கு வழிபாடு: ஆன்லைன் தரிசன முன்பதிவு ஜன. 10-ம் தேதி வரை நிறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in