

சென்னை: சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் மீஞ்சூர் - பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு பிப். 4, 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், மீஞ்சூர் - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
கும்மிடிப்பூண்டி - சென்னை சென்ட்ரலுக்கு பிப். 5, 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி - மீஞ்சூர் இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
மைலம் - திண்டிவனம் இடையே பொறியியல் பணி காரணமாக, தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில்சேவையில் பிப். 5, 7 ஆகிய தேதிகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
மெமு ரயில்: இதன்படி, தாம்பரம் - விழுப்புரத்துக்கு பிப். 5,7 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணிக்கு புறப்படும் மெமு ரயில், திண்டிவனம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
விழுப்புரம் - சென்னை கடற்கரைக்கு மேற்கண்ட தேதிகளில் மதியம் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு ரயில், விழுப்புரம் - திண்டிவனம் இடையே பகுதி ரத்து செய்யப்படும். இத்தகவல், சென்னை ரயில்வே கோட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.