தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை

தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை
Updated on
1 min read

சென்னை: வங்​கி​யில் கடன் பெற்று தனி​யார் நிறு​வனம் ரூ.1,109 கோடி மோசடிசெய்த விவ​காரத்​தில், தமிழகம் உட்பட 4 மாநிலங்​களில் சிபிஐ சோதனை நடத்தி முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்றியது.

ஒடிசா புவனேஸ்​வரை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படும் குப்தா பவர் இன்ஃப்​ராஸ்ட்​ரக்​சர் என்ற நிறு​வனம், கனரா வங்​கி​யில் சுமார் ரூ.1,109 கோடி கடன்பெற்று மோசடி செய்​த​தாக, சிபிஐ-​யிடம் புகார் அளிக்​கப்​பட்​டது. இப்​பு​காரின் அடிப்​படை​யில், வழக்​குப் பதிவு செய்த அதி​காரி​கள் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வந்​தனர். முதற்கட்ட விசா​ரணை​யில், அந்​நிறு​வனத்தின் பல்​வேறு முறை​கேடு​கள் வெளிச்​சத்​துக்கு வந்​துள்ளன.

குறிப்​பாக, கூடு​தல் கடன் வசதி​களைப் பெறு​வதற்​காகத் தங்​களது பங்​கு​களின் மதிப்​பைச் செயற்​கை​யாக மாற்​றியமைத்​தது. வர்த்தக வரவு​களை உண்​மைக்கு மாறாக உயர்த்தி காட்​டியது. நிறு​வனத்​தின் நிதி​நிலை அறிக்​கைகளை போலி​யாகத் தயாரித்​தது.

வங்​கி​யில் பெற்ற கடன் நிதியை வேறு வழிகளில் மடை​மாற்​றம் செய்து முறை​கே​டாகப் பயன்​படுத்​தி​யது என தொடர் முறை​கேடு​கள் மூலம், கனரா வங்​கிக்கு ரூ.1,109 கோடி அளவுக்​குப் பெரும் நஷ்டத்தை அந்​நிறு​வனம் ஏற்​படுத்​தி​யது தெரிய வந்​தது.

இதனைத் தொடர்ந்​து, புவனேஸ்​வரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் பேரில், சிபிஐ அதி​காரி​கள் அதிரடி சோதனை​யில் இறங்​கினர். அதன்​படி, தமிழகம், மேற்கு வங்​கம், ஒடி​சா, உத்​தரா​கண்ட் ஆகிய 4 மாநிலங்​களில் உள்ள அந்​நிறு​வனம் தொடர்​புடைய 6 முக்​கிய இடங்​களில் நேற்​று​முன்​தினம் சிபிஐ அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

தமிழகத்​தில், திரு​வள்​ளூர் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்ள அந்​நிறு​வனத்​தின் உற்​பத்தி ஆலை, புவனேஸ்​வரில் உள்ள அந்​நிறு​வனத்​தின் 4 இயக்​குநர்​களின் வீடு​கள் மற்​றும் தொழிற்​சாலைகள், கொல்​கத்​தா​வில் உள்ள நிறு​வனத்​தின் பதிவு அலு​வல​கம், உத்​தரா​கண்ட் மாநிலம் காசிப்​பூரில் உள்ள தொழிற்​சாலை உள்​ளிட்ட இடங்​களில் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். இந்த சோதனை​யில், பல்வேறு முக்​கிய ஆவணங்​களை சிபிஐ அதி​காரி​கள் கைப்​பற்​றி​யுள்​ளனர். இந்த ஆவணங்​களின் அடிப்​படை​யில், அடுத்​தக்​கட்ட வி​சா​ரணை​யைச்​ சிபிஐ தீவிரப்​படுத்​தி​யுள்​ளது.

தனியார் நிறுவனம் ரூ.1,109 கோடி மோசடி: தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் சிபிஐ சோதனை
பொறியியல் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in