செஞ்சியில் பாஜக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை

செஞ்சியில் பாஜக பிரமுகர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை
Updated on
1 min read

விழுப்புரம்: செஞ்​சி​யில் பாஜக பிர​முகர் வீடு, அலு​வல​கங்​களில் சிபிஐ அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். விழுப்​புரம் மாவட்​டம் செஞ்சி அடுத்த கல்​லடிக்​குப்​பத்​தைச் சேர்ந்​தவர் ஏழு​மலை. பாமக​வில் இருந்​த​போது வல்​லம் ஒன்​றியக் குழு தலை​வ​ராக இருந்த ஏழு​மலை, தற்​போது பாஜக வர்த்​தகப் பிரி​வில் நிர்​வாகி​யாக இருக்​கிறார். இவரது மகன்​கள் ஆனந்​த​ராஜ், ஆனந்​தகு​மார்.

இவர்​களுக்கு கல்​லடிக்​குப்​பத்​தில் பிரம்​மாண்ட வீடு, நாட்​டார்​மங்​கலத்​தில் வணிக வளாகக்கட்​டிடம், திரையரங்​கம், திருமண மண்​டபம் மற்​றும் சென்னை கீழ்​கட்​டளை​யில் திருமண மண்​டபம், பல்​பொருள் அங்​காடி உள்​ளிட்​டவை உள்​ளன.

இவற்​றுக்​கான தலைமை அலு​வல​கம் நாட்​டார்​மங்​கலத்​தில் உள்ள வணிக வளாகத்​தில் இயங்​கு​கிறது. ரூ.116 கோடி பணப் பரி​மாற்​றம் இந்​நிலை​யில் கல்​லடிக்​குப்​பத்​தில் உள்ள வீடு, நாட்​டார்​மங்​கலத்​தில் உள்ள வணிக வளாகம் மற்​றும் செஞ்​சி​யில் உள்ள திரையரங்​கம், திருமண மண்​டபங்​களில் சிபிஐ அதி​காரி​கள் நேற்று சோதனை மேற்​கொண்​டனர்.

இதே​போல, சென்​னை​யில் உள்ள வர்த்தக நிறு​வனத்​தி​லும் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. நேற்று காலை முதல் மாலை வரை நடை​பெற்ற சோதனை​யில், அதி​காரி​கள் முக்​கிய ஆவணங்​களை கைப்​பற்​றி​யுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in