ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்கால தடை
Updated on
1 min read

புதுடெல்லி: ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்​கில் சிபிஐ விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​கால தடை விதித்​துள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலை​வ​ராக இருந்த ஆம்​ஸ்ட்​ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி அவரது வீட்​டுக்கு அருகே வெட்​டிக்​கொலை செய்​யப்​பட்​டார். இதுகுறித்த வழக்கு சிபிஐ விசா​ரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த உத்​தர​வுக்கு இடைக்​கால தடை கோரி​யும், ரத்து செய்​யக் கோரி​யும் தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்​சநீ​தி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே. மகேஸ்​வரி, என்​.​வி. அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு கடந்த செப்​. 10-ல் விசா​ரித்​தது.

இதனிடையே, சிபிஐ விசா​ரணையை உத்​தர​விட்​டதை திரும்ப பெறக் கோரி தமிழக அரசு தாக்​கல் செய்த மனு மீது நேற்று நடை​பெற்ற விசா​ரணை​யில், எதிர் மனு​தா​ரர் ஆம்​ஸ்ட்​ராங்​கின் சகோ​தரர் சார்​பில் வழக்​கறிஞர் யோகேஷ் கண்ணா ஆஜராகி, இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் வழக்​கின் கோப்​பு​களை சிபிஐ​யிடம் இது​வரை ஒப்​படைக்​க​வில்​லை. இதற்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தாக்​கல் செய்​துள்​ளோம் என்று வாதிட்​டார்.

அப்​போது நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கை விசாாரிக்க முடி​யாது என்று தெரி​வித்​தனர். இதைத் தொடர்ந்​து, தமிழக அரசு தரப்பு மூத்த வழக்​கறிஞர் சித்​தார்த் லூத்ரா ஆஜராகி, ஆம்​ஸ்ட்​ராங் கொலை வழக்கு கோப்பை சிபிஐக்கு தமிழ்​நாடு அரசு கொடுக்​க​வில்லை என்ற வாதத்தை ஏற்க முடி​யாது. இந்த வழக்​கின் அனைத்து அம்​சங்​களும் ஆராயப்​பட்​டு, சாட்​சி​யங்கள பதிவு செய்​யப்​பட்ட வழக்​கின் கோப்பு 7500 பக்​கங்​களை கொண்​ட​தாக உள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்​றம் குற்​றப்​பத்​திரிகை குறித்து 6 பத்​தி​களில் நிராகரித்​துள்​ளதை உச்ச நீதி​மன்​றம் நிறுத்தி வைத்​துள்​ளது. கடந்த விசா​ரணை​யின்​போது குற்​றப்​பத்​திரிகை ரத்து ஆகி​விடக்​கூ​டாது என்​ப​தில் முனைப்பு காட்​டினோம் என்றார்.

ஆம்​ஸ்ட்​ராங்​கின் மனைவி பொற்​கொடி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் ஆர். வசந்த், வழக்​கறிஞர்​கள் ராகுல் ஷியாம் பண்​டாரி, இந்த விவ​காரத்​தில் காவல்​துறை​யின் மனுவை விசா​ரிக்​காமல் தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

சிபிஐ விசா​ரணை கோரி தாக்​கல் செய்​துள்ள இடை​யீட்டு மனுவை விசா​ரணைக்கு ஏற்க வேண்டும் என்று வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததுடன், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜன. 20-க்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in