லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவில் 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் 64 பேர் மீது வழக்குப் பதிவு

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவில் 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் 64 பேர் மீது வழக்குப் பதிவு
Updated on
1 min read

சென்னை: ​சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் நடத்​தப்​பட்ட சோதனை​யில் ரூ.37.75 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்ட விவ​காரத்​தில், 11 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் 64 பேர் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை வழக்​குப் பதிவு செய்​துள்​ளது.

தமிழகம் முழு​வதும் கடந்த 4-ம் தேதி சுப​முகூர்த்த தினத்தை ஒட்​டி, நிலம் மற்​றும் இதர சொத்​துகளைப் பதிவு செய்​வதற்​காகச் சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் பொது​மக்​கள் கூட்​டம் அலைமோ​தி​யது. இதனிடையே பத்​திரப் பதிவுக்கு லஞ்​சம் பெறப்​படு​வ​தாக கிடைத்த ரகசி​யத் தகவலின் அடிப்​படை​யில், லஞ்ச ஒழிப்​புத் துறை அதி​காரி​கள் ஒரே நேரத்​தில் தமிழகம் முழு​வதும் உள்ள 62 முக்​கிய​மான சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் திடீரென சோதனை மேற்​கொண்​டனர். இந்த சோதனை​யில் கணக்​கில் வராத ரூ.37 லட்​சத்து 75 ஆயிரம் 650 ரொக்​கம் பறி​முதல் செய்​யப்​பட்​டது.

இதன் தொடர்ச்​சி​யாக லஞ்ச ஒழிப்​புத் துறை​யினர் 11 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் மொத்​த​மாக 64 பேர் மீது வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். 5 சார்​ப​தி​வாளர்​கள் மற்​றும் 8 உதவி​யாளர்​கள், அவர்​களுக்கு லஞ்​சம் கொடுக்க வந்த தரகர்​கள், தனி​நபர்​கள் ஆகியோர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டுள்​ளது.

பெரும்​பாலான சார்​ப​தி​வாளர்​கள் உதவி​யாளர்​களைப் பயன்​படுத்​தியே பத்​திரப்​ப​திவு செய்ய வந்​தவர்​களிடம் லஞ்​சம் பெற்​ற​தாக தெரிய​வந்​துள்​ளது.

திரு​வள்​ளூரில் 8 பேர் மீதும், கடலூரில் ஒரு​வர் மீதும், செங்​கல்​பட்​டில் 4 பேர், திருப்​பத்​தூரில் 6 பேர், கள்​ளக்​குறிச்​சி​யில் 10 பேர், தூத்​துக்​குடி​யில் 6 பேர், கோவை தொண்​டா​முத்​தூரில் 5 பேர், கோவை காந்​திபுரத்​தில் 5 பேர், திருப்​பூரில் 12 பேர், சேலத்​தில் 3 பேர், கிருஷ்ணகிரி​யில் 4 பேர் மீதும் வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​து.

11 சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​கள் தொடர்​பான சோதனை​யில் மட்​டுமே வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்ள நிலை​யில் மற்ற சார் பதி​வாளர் அலு​வல​கங்​களின் சோதனை தொடர்​பாக விசா​ரணை நடை​பெற்று வரு​வ​தாக​வும் வழக்கு எண்​ணிக்கை அதி​கரிக்​கலாம் எனவும் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார்​ தெரி​வித்​துள்​ளனர்​.

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை முடிவில் 11 சார்பதிவாளர் அலுவலகங்களில் 64 பேர் மீது வழக்குப் பதிவு
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” - முதல்வர் விஜய் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in