தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு
Updated on
1 min read

சென்னை: தேர்​தல் நடத்தை விதி​களை மீறி செயல்​படு​வ​தாக தமிழக முதல்​வரின் தனிச் செயல​ரான உமா​நாத் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தேர்​தல் ஆணை​யம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இது தொடர்​பாக, பாஜக வழக்​கறிஞ​ரான ஏ.மோகன்​தாஸ் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “தமிழகத்​தில் தேர்​தல் நடத்தை விதி​கள் அமலில் உள்ள நிலை​யில் முதல்​வரின் தனிச் செயல​ராக பதவி வகி்த்து வரும் ஐஏஎஸ் அதி​காரி​யான உமா​நாத், தன்​னிச்​சை​யாக தனக்கு கீழ் பணிபுரி​யும் ஐஏஎஸ் மற்​றும் ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு உத்​தர​வு​களை பிறப்​பித்து வரு​கிறார்.

இது தேர்​தல் நடத்தை விதி​களுக்கு எதி​ரானது. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது மனு​தா​ரர் குற்​றம்​சாட்​டும் முதல்​வரின் தனிச் செயல​ரான ஐஏஎஸ் அதி​காரிக்​கும், தேர்​தல் பணி​களுக்​கும் எந்​த​வித​மான சம்​பந்​த​மும் இல்லை என தேர்​தல் ஆணை​யம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி​கள், இது தொடர்​பாக வரும் ஏப்​.17-க்​குள் தேர்​தல் ஆணை​யம் பதிலளிக்க வேண்​டும், என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in