தென்காசி தொகுதியில் தெறிக்கவிடும் வெற்றி யாருக்கு?

அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

Updated on
2 min read

தென்காசி: தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 1,36,260 ஆண்கள், 1,43,223 பெண்கள், 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,79,585 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தம் 359 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாடார், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் அதிக அளவில் உள்ளனர். விவசாயம், பீடி சுற்றும் தொழில், வியாபாரம் முக்கிய தொழிலாகக் கொண்ட இந்த தொகுதியில் இரட்டைகுளம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், குற்றாலத்தில் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும், அரசு மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் தொகுதி மக்களிடம் உள்ளன.

22 பேர் போட்டி

திமுக சார்பில் கலை கதிரவன், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியன், தவெக சார்பில் ராஜபிரகாஷ், நாதக சார்பில் புஷ்பலதா மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட 22 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக வேட்பாளர் கலை கதிரவன் வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் கலை கதிரவன் வாக்கு சேகரித்தார்.

திமுக வேட்பாளர் டாக்டர் கலை கதிரவன், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான திமுக அமைப்பு இணைச் செயலாளர் அன்பகம் கலை என்பவரின் மகன் ஆவார்.

இதனால் திமுக நிர்வாகிகள் இவருக்கு ஆதரவாக தீவிரமாக களப்பணியாற்றுகின்றனர். திமுக ஆட்சியின் 5 ஆண்டு கால சாதனைகளையும், திமுகவின் தற்போதைய தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி, சுரண்டையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனை, சுரண்டையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை கொண்டுவரப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

தென்காசி தொகுதி தவெக வேட்பாளர் ராஜபிரகாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தென்காசி தொகுதி தவெக வேட்பாளர் ராஜபிரகாஷ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் கடந்த 2016 தேர்தலில் தென்காசி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

முந்தைய அதிமுக அரசின் திட்டங்கள், இதற்கு முன்பு தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, இத்தொகுதிக்கு தான் கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறியும் வாக்கு சேகரித்து வருகிறார்.

கனிமவள கொள்ளை தடுக்கப்படும், குற்றாலத்தில் இடர்பாடுகள் அனைத்தையும் களைய பாடுபடுவேன் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்கிறார்.

நாதக வேட்பாளர் புஷ்பலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நாதக வேட்பாளர் புஷ்பலதா பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தவெக வேட்பாளர் ராஜபிரகாஷ், விஜய் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை கூறி வாக்கு சேகரித்து வருகிறார். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தவெகவை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும், இரட்டைகுளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் கூறி பிரச்சாரம் செய்கிறார்.

இதேபோல், நாதக வேட்பாளர் புஷ்பலதா, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும், கனிமவளங்கள் கேரளாவுக்கு கொண்டுசெல்வது தடுக்கப்படும், பீடி தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழில் உருவாக்கப்படும், தென்காசி ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடம் திறக்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

வளர்ச்சிகள் அதிகரிக்கவில்லை

தென்றல் நகரான தென்காசியில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. வேட்பாளர்களின் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. முந்தைய தேர்தல்களில் அளித்த வாக்குறுதிகளை மறக்காமல் மீண்டும் அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி கூறும் வேட்பாளரகள், கூடுதல் வாக்குறுதிகளையும் அள்ளி வீசி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

கடந்த 2 தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளருக்கும், இரண்டாம் இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஒவ்வொரு வாக்கின் அவசியத்தையும் உணர்ந்து, வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு, 6 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் வளர்ச்சிகள் அதிகரிக்கவில்லை என்பது வாக்காளர்களின் ஆதங்கமாக உள்ளது. இதனால், மாவட்டத்தின் தலைநகராக உள்ள தென்காசியில் வெற்றிபெறும் வேட்பாளரிடம் இருந்து அதிகமான திட்டங்களை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் தெறிக்க விடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in