செய்யூர் தொகுதியில் பிரச்சாரக் களம் எப்படி? - ஒரு நிலவரப் பார்வை

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜசேகர்.

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜசேகர்.

Updated on
2 min read

செய்யூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் அதி​முக கூட்டணியில் விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சி, அதி​முக, நாம் தமிழர் கட்​சி, தமிழக வெற்​றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்​சி, சசிகலா​வின் அனைத்​திந்​திய புரட்சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் உள்​ளிட்ட கட்​சிகள் மற்​றும் சுயேச்​சைகள் என 13 பேர் களத்​தில் உள்ளனர்.

விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி - சிந்​தனை செல்​வன்

திமுக கூட்​ட​ணி​யில் விசிக சார்​பில் போட்​டி​யிடும் சிந்தனை செல்​வன், இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைப்​ப​தற்​கான வாய்ப்​பு​களை ஏற்​படுத்​து​வேன்.

கல்​பாக்​கம் அணுமின் நிலை​யத்​தில் உள்​ளூர் மக்​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்க குரல் கொடுப்​பேன், கிழக்கு கடற்​கரை சாலை​யோர கிராமங்​களில் தேவைப்​படும் அடிப்​படை வசதி​களை மேம்​படுத்த நடவடிக்கை எடுப்பேன் என உறு​தி​கூறி வாக்கு சேகரித்து வரு​கிறார்.

செய்​யூரில் கூட்​டணி கட்​சி​யினருடன் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட விசிக வேட்​பாளர் சிந்​தனை செல்​வன்.

செய்​யூரில் கூட்​டணி கட்​சி​யினருடன் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட விசிக வேட்​பாளர் சிந்​தனை செல்​வன்.

அதி​முக - ராஜசேகர்

அதி​முக சார்​பில் போட்​டி​யிடும் ராஜசேகர், பவூஞ்​சூரில் அரசு கலைக்​கல்​லூரி அமைக்க நடவடிக்​கை, கிழக்கு கடற்​கரை சாலை சீரமைப்பு பணி​களை துரிதப்படுத்துதல், செய்​யூரில் அரசு போக்​கு​வரத்​துக் கழக பணிமனை மற்​றும் கிராமப்​புற பேருந்து சேவை​களை மேம்​படுத்​தப்​படும், உள்​ளூர் மக்​களின் வேலை வாய்ப்புக்கு முக்​கி​யத்​து​வம் வழங்​கப்​படும் என பிரச்சாரம் செய்து வரு​கிறார்.

நாம் தமிழர் கட்சி - சுவா​திலட்​சுமி

நாதக சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் சுவா​திலட்​சுமி, விவ​சா​யிகளுக்​கான திட்​டங்​களை முறை​யாகச் செயல்படுத்த நடவடிக்​கை, கிராமப்​புற சாலை திட்​டங்​கள் முறைப்​படுத்​தப்​படும்.

மாட்டு வண்​டி​யில் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சுவா​திலட்​சுமி.

மாட்டு வண்​டி​யில் சென்று வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்ட நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சுவா​திலட்​சுமி.

உள்​ளூர் மக்​கள் மற்​றும் இளைஞர்​களுக்​கான வேலை​வாய்ப்​புக்கு முன்​னுரிமை, மீனவ மக்​களுக்கு தேவை​யான நலத்​திட்​டங்​களை செயல்​படுத்​தப்​படும் என பிரச்​சா​ரம் செய்து வரு​கிறார்.

தமிழக வெற்​றிக்​கழகம் - மோகன்​ராஜா

தவெக சார்​பில் போட்​டி​யிடும் மோகன்​ராஜா, மீனவர்களுக்​கான திட்​டங்​களுக்கு முக்​கி​யத்​து​வம், கடப்பாக்​கம் பகு​தி​யில் சுற்​றுலாவை மேம்​படுத்​துதல், விவசா​யிகளுக்கு மாவட்ட நிர்​வாகம் அறிவிக்​கும் நலத்​திட்டங்​களை தடை​யின்றி கிடைக்​க​வும், அதுதொடர்​பாக விவ​சா​யிகள் அறி​யும் வகை​யில் குழு அமைத்து செயல்படு​வேன் என்​றும் கூறி வாக்​கு சேகரித்து வருகிறார்.

வாக​னத்​தில் வீதிதோறும் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட தமிழக வெற்​றிக்​கழக வேட்​பாளர் மோகன்​ராஜா.

வாக​னத்​தில் வீதிதோறும் பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்ட தமிழக வெற்​றிக்​கழக வேட்​பாளர் மோகன்​ராஜா.

செய்யூர் தொகுதி வேட்​பாளர்​கள் அனைவரும் வாக்​குறு​தி​களை அள்ளி வீசி வாக்கு சேகரித்து வரு​கின்​றனர். இதில் வாக்​கு​களை அள்​ளப்​போவது யார் என்ற எதிர்​பார்ப்பு அதி​கரித்​து உள்​ளது.

பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு, வாக்குசேகரித்த அதிமுக வேட்பாளர் ராஜசேகர்.

கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in