ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பு

கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி.

கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி.

Updated on
1 min read

சென்னை: ஆயிரம்விளக்கு தொகு​தி​யில் திமுக, அதி​முக, நாம் தமி​ழர், தவெக உள்​ளிட்ட கட்​சி​களின் வேட்​பாளர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டனர்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் திமுக வேட்​பாளர் எழிலன் நாக​நாதன், கோபாலபுரம் பகு​தி​யில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். புதுப்​பேட்டை பகு​தி​யில் பிரச்​சா​ரத்தை தொடங்​கி, அவ்வை சண்​முகம் சாலை​யில் நிறைவு செய்​தார்.

திமுக​வின் கடந்த 5 ஆண்டு சாதனை​கள், தொகு​தி​யில் நிறை​வேற்​றிய திட்​டங்​களை மக்​களிடம் கூறி வாக்கு சேகரித்​தார்.

அதி​முக வேட்​பாளர் பா.வளர்​ம​தி, கோபாலபுரம் பகு​தி​யில் வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். முன்​ன​தாக, அதி​முகவைச் சேர்ந்த மூத்த தொண்​டரை நேரில் சந்​தித்​து, ஆசி பெற்​றார்.

அப்போது அங்கிருந்த ஒருவர், அவ்வை சண்​முகம் சாலை​யில் உள்ள செங்​காந்​தள் பூங்​கா​வின் நுழைவுக் கட்​ட​ணம் அதி​முக ஆட்​சி​யில் ரூ.50 ஆக இருந்​தது. தற்​போது ரூ.300 முதல் ரூ.400 வரை வசூலிக்​கின்​ற​னர்.

அதி​முக ஆட்சி அமைந்​தவுடன், பூங்​கா​வின் கட்​ட​ணத்தை குறைக்க வேண்​டும்” என்று கோரிக்கை விடுத்​தார். “அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் கட்​ட​ணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று வளர்​மதி உறு​தி​யளித்​தார்.

மேலும் கூறுகை​யில், ஆயிரம்​விளக்கு தொகு​தி​யில் பட்டா இல்​லாதவர்​களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்​கப்​படும். தொகு​தி​யில் அடிப்​படை வசதி​கள் அனைத்​தும் மேம்​படுத்தி தரப்​படும் என்​றார்.

நாம் தமி​ழர் வேட்​பாள​ரும் திரைப்பட இயக்​குநரு​மான மு.களஞ்​சி​யம் கிரீம்ஸ் சாலையில் வாக்கு சேகரித்​தார். காவலர் குடி​யிருப்​பு, சுதந்​திரா நகர் பகுதி உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் தூய்​மை​யான குடிநீர், தரமான கல்​வி, மருத்​து​வம் அளிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என கூறி வாக்கு சேகரித்​தார்.

இதுத​விர, தவெக வேட்​பாளர் ஜேசிடி பிர​பாகருக்கு ஆதர​வாக கட்சி தலை​வர் விஜய், நுங்​கம்​பாக்​கத்​தில் வாக்கு சேகரித்​தார்.

<div class="paragraphs"><p>கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி.</p></div>
பல்லாவரம் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன்: ஐஜேகே வேட்பாளர் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in