

அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் பீர்க்கன்காரணை பகுதியில் வாக்கு சேகரித்தார்.
தாம்பரம்: தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் தொகுதி முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று பீர்க்கன்காரணை, மேற்கு தாம்பரம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தாம்பரத்தின் அடையாளமான முத்துரங்கம் பூங்கா பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ளது.
வெற்றி பெற்றதும், பூங்காவை நவீனப்படுத்தி பல்வேறு வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாத புலிகொரடு பகுதிக்கு சாலை, மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தரப்படும்.
பீர்க்கன்காரணையில் உள்ள அரசு பள்ளியை மேம்படுத்தி, மாணவர்களின் கல்வித் தரம் உயர்த்தப்படும். சுகாதாரமான சூழ்நிலையில் மக்கள் வாழக்கூடிய தொகுதியாக தாம்பரத்தை மாற்றுவேன். வெற்றி பெற்றதும் அனைத்து பூங்காக்களையும் சீரமைத்து பராமரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் கிருத்திகா தேவி, முன்னாள் எம்எல்ஏ ராஜா, மேயர் வசந்தகுமாரி கூட்டணி கட்சியினருடன் இணைந்து, தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
முடிச்சூர், அகரம்தென், திருவஞ்சேரி, மதுரப்பாக்கம் ஊராட்சிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் மற்றும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி கொண்டுவரப்படும். தாம்பரம் மாநகராட்சி மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நவீன வசதிகளுடன் புதிய மார்க்கெட் மாற்றியமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கிரீம்ஸ் சாலை பகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.களஞ்சியம்
தாம்பரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் டி.சரத்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு தவெக நிர்வாகிகள் சார்பில் பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர்கள் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
செம்பாக்கம், பெருங்களத்தூர் போன்ற பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் தொடங்கப்படும் தொகுதிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுத்து தூர்வாரி சீரமைக்கப்படும், வெள்ள பாதிப்பை தடுக்க முறையான மழை நீர் வடி கால்வாய்கள் அமைக்கப்படும்.
இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் செம்பாக்கம் மண்டல அலுவலகத்தின் அருகே உள்ள கால்பந்து மைதானத்தை எம்எல்ஏ மேம்பாட்டு நீதியில் மேம்படுத்தப்படும் என தெரிவித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.