

சென்னை: நந்தன் நிலேகனி தலைமையிலான மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான உயர்நிலை பணிக் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பில் அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலர் சாய்குமார், மத்தியக் குழு உறுப்பினர்கள் அனிதா கர்வால், வீ.காமகோடி, சங்கர் மருவாடா மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, இதர உயர்கல்வி சேர்க்கைக்கான தேர்வுகளுக்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண்களையே சேர்க்கைக்கான அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார்.