“வாக்காளர் அட்டை இல்லை என்றால் அரசின் உதவிகளை பெற முடியாதா?” - பெ.சண்முகம் காட்டம்

பெ.சண்முகம்

பெ.சண்முகம்

Updated on: 
1 min read

சென்னை: ‘வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்பதா?’ என மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘முன்னொரு காலத்தில் அனைத்துக்கும் ரேஷன் அட்டையே அடிப்படை என்றார்கள். பிறகு அனைத்துக்கும் ஆதாரம் "ஆதார்" என்றார்கள். இப்போது, வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் அரசிடம் இருந்து எந்த உதவிகளையும் பெற முடியாது என்கிறார்கள்.

அரசிடம் இருந்து உதவிகளை எதிர்பார்த்து இருப்பவர்கள் ஏழைகளே. எனவே, இது ஏழைகள் மீதான ஒன்றிய பாஜக அரசின் மற்றொரு கொடூரமான தாக்குதல். முதலாளிகளிடம் முகவரி கூட கேட்காத ஆட்சியாளர்கள் ஏழைகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டு, இப்போது வாக்காளர் அடையாள அட்டை கேட்கிறார்கள்.

ஆயுள் முழுக்க அடையாளத்தை நிரூபிக்கவே மக்கள் அலைய வேண்டுமா மோடி அவர்களே?’ எனத் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>பெ.சண்முகம்</p></div>
“நிர்வாகத் தோல்வியை மறைக்கவே குதிரை பேரம் என நீலிக்கண்ணீர் வடிக்கிறது தவெக” - தினகரன்

X