உட்கட்சி அரசியலால் விரக்தியில் புஸ்ஸி ஆனந்த்?

கேட்டது சோழிங்கநல்லூர்.. கிடைத்தது தி.நகர்..
உட்கட்சி அரசியலால் விரக்தியில் புஸ்ஸி ஆனந்த்?
Updated on
2 min read

தவெக-வுக்​​குள் ஜான் ஆரோக்​​கிய​​சாமி​யும், ஆதவ் அர்​​ஜு​னா​வும் இணைந்து புஸ்ஸி ஆனந்​​துக்கு எதி​ராக ‘லாபி’ செய்து வரு​வது ஆனந்த் தரப்பை நிலை​குலைய வைத்​​திருக்​​கிறது. இதன் உச்​​சக்​​கட்​​ட​​மாக, சோழிங்​​கநல்​​லூரில் போட்​​டி​யிட விரும்​​பிய ஆனந்தை வலுக்​​கட்​​​டாய​​மாக தி.நகருக்​​குத் தள்​​ளி​விடும் நிலைக்கு விஜய்​​யிடம் காய்​​களை நகர்​த்தி வெற்றி பெற்​​று​விட்​​​டார்​​கள் ஜான் - ஆதவ் கூட்​​டணி என்​​கி​றார்​​கள் விபரமறிந்​​தவர்​​கள்.

இதுகுறித்து தவெக உள்​​வட்​​​டாரங்​​கள் பேசுகை​யில், “தவெக உரு​வாவதற்கு புஸ்ஸி ஆனந்த் அஸ்​​தி​வார​​மாக இருந்​​த​​தால், அவருக்​​குக் கட்​​சி​யில் மிக முக்​​கிய​​மான பொதுச்​​செய​லா​ளர் பதவியைக் கொடுத்​​​தார் விஜய். ஆனால், சமீப​​கால​​மாக நிலைமை தலை​கீழாக மாறி​விட்​​டது. ஜான் ஆரோக்​​கிய​​சாமி, ஆதவ் அர்​​ஜுனா இணைந்து ஆனந்​​துக்கு எதி​ராகத் திட்​​ட​மிட்டே காய்​​நகர்​த்தி வரு​கி​றார்​​கள்.

‘புஸ்ஸி ஆனந்​​துக்​​குக் கட்​​சி​யின் அரசி​யல் வியூ​கங்​​களைப் புரிந்து கொள்​​ளத் தெரிய​வில்​​லை; மேடைகளில் பேசுவதற்​​கும் அவருக்​​குப் போதிய ஆளுமை இல்​​லை. அவருக்​​குத் தொடர்​ந்து முக்​​கி​யத்​​து​வம் கொடுத்​​​தால் அது கட்​​சி​யின் ஒட்​​டுமொத்த தோல்​விக்கே வழி​வகுக்​​கும்’ என அவர்​​கள் விஜய்​​யின் காதுகளைக் கவ்வி வரு​கி​றார்​​கள்.

இதனால் சமீப​​கால​​மாக தவெக நிகழ்​ச்​​சிகளில் ஆனந்​​துக்​​​கான முக்​​கி​யத்​​து​வம் குறைக்​​கப்​​பட்டு வரு​கிறது. இதற்​​கிடை​யில், ஆனந்த் தயா​ரித்த வேட்​​​பாளர் பட்​​டியலை நிராகரித்த அந்​​தத் தரப்​​பு, ‘பாஜக-வுடன் கூட்​​டணி வைக்க ஆனந்த் விரும்​​பு​கி​றார்’ என்​​கிற தகவலை​யும் பரப்பி வரு​வ​​தாக ஆனந்த் தரப்பு கூறி வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​​யாகவே, சோழிங்​​கநல்​​லூரில் போட்​​டி​யிட விரும்​​பிய ஆனந்தை தி.நகர் தொகு​தி​யில் முடக்​​கி​விட்​​​டார்​​கள்.

ஆரம்​​பத்​​தில் ஆனந்த் எடுத்த ரகசிய சர்​​வே​யில், சோழிங்​​கநல்​​லூர் தொகு​தி​யில் போட்​​டி​யிட்​​​டால் மட்​​டுமே வெற்றி நிச்​​ச​யம் என ரிசல்ட் வந்​​திருந்​​தது. தமி​ழ​கத்​​திலேயே அதிக வாக்​​​காளர்​​களைக் கொண்ட தொகுதி என்​​ப​​தா​லும், ஐடி ஊழியர்​​கள் அதி​கம் நிறைந்த பகுதி என்​​ப​​தா​லும், அங்கு உறுப்​​பினர் சேர்​க்கை மற்​​றும் கிளை அமைப்​​பு​கள் வலு​வாக இருப்​​ப​​தா​லும் அந்​​தத் தொகு​தி​யையே ஆனந்த் மலை​போல நம்​​பி​யிருந்​​​தார்.

மேலும், அங்கு இரண்டு முறை தொடர்​ந்து வெற்றி பெற்ற திமுக எம்​​.எல்.ஏ அரவிந்த் ரமேஷ் மீது தொகு​திக்​​குள் நில​வும் அதிருப்​​தி​யும், அதி​முக-​வில் கே.பி.கந்​​தனுக்​​குப் பெரிய அளவில் வரவேற்பு இல்​​லாததும் தனக்​​குச் சாதக​​மாக அமை​யும் என ஆனந்த் கணக்​​குப் போட்​​டிருந்​​​தார். ஆனால், ‘அங்கே சென்னை புறநகர் மாவட்​​டச் செய​லா​ளர் சரவணனை நிறுத்​​தி​னால்​​​தான் சரி​​யாக இருக்​​கும்; அவருக்​​குத்​​​தான் மக்​​கள் ஆதரவு இருக்​​கிறது’ என ஆதவ் - ஜான் தரப்பு விஜய்​​யிடம் சொல்​​லி​யிருக்​​கிறது.

இதையடுத்​​து, அம்​​பத்​​தூர் தொகு​தி​யைக் குறி​வைத்து ஆனந்த் வேலை செய்​​​தார். அங்​​குப் பட்​​டியலின மற்​​றும் கிறிஸ்தவ மக்​​கள் அதி​க​​மாக வசிப்​​ப​​தால், அவர்​​கள் தவெக-வுக்கு வாக்​​களிப்​​​பார்​​கள்; அதன் மூலம் எளி​தில் வென்​​று​விடலாம் என நம்​​பி​னார். ஆனால், அங்​​கே​யும் ‘ஜே.சி.டி பிர​​பாகருக்கு வாய்​ப்பு கொடுத்​​​தால்​​​தான் சரி​​யாக இருக்​​கும்’ எனச் சொல்லி ஆனந்​​துக்கு செக் வைத்​​தது அந்​​தத் தரப்​​பு.

இறு​தி​யில், ‘சென்​​னை​யில் திமுக பலமி​ழந்து இருக்​​கும் தொகு​தி​களில் தி.நகரும் ஒன்​​று; அங்கு ஆனந்தை நிறுத்​​தி​னால் வெற்றி நிச்​​ச​யம் என எங்​​கள் சர்வே சொல்​​கிறது’ எனப் புதுக் கதையைச் சொல்லி ஆனந்தை தி.நகருக்​​குத் தள்​​ளி​விட்​​டிருக்​​கி​றார்​​கள்.

ஆனால், தி.நகர் தொகு​தி​யில் வெற்றி பெறு​வது எவ்​​வளவு கடினம் என்​​பது இப்​​போது​​தான் ஆனந்​​துக்​​குத் தெரிய​வந்​​திருக்​​கிறது. அங்கே திமுக சார்​​பில் சிட்​​டிங் எம்​​.எல்.ஏ கருணாநி​தி, உதயநிதி ஆதர​வாளர் ராஜ அன்​​பழ​கன் ஆகி​யோர் சீட் பெற தீவிர​​மாக முயன்று வரு​கி​றார்​​கள். கடந்த முறை நூலிழை​யில் வெற்​​றியைத் தவற​விட்ட அதி​முக-​வின் தி.நகர் சத்யா கடும் சவாலாக இருப்​​​பார்.

மேலும், பாஜக-வுக்​​குச் செல்​​வாக்​​குள்ள தொகுதி என்​​ப​​தால் தமி​ழிசை, எஸ்​​.ஜி.சூர்​​​யா, வினோஜ் பி செல்​​வம் எனப் பலமான வேட்​​​பாளர்​​கள் களமிறங்​​கக் காத்​​திருக்​​கி​றார்​​கள். இதனால் வெற்​​றி​பெறு​வது கடினம் என ஆனந்த் விரக்​​தி​யில் இருக்​​கி​றார். விஜய்​​யைச் சந்​​தித்​​துப் பேசி​யும் பலன் கிடைக்​​​காத​​தால் அவர் ஆழ்​ந்த வருத்​​தத்​​தில் இருக்​​கி​றார்” என்​​ற​னர்.

இதுதொடர்​​​பாக புஸ்ஸி ஆனந்த் தரப்பு வட்​​​டாரங்​​கள் கூறுகை​யில், “நிர்​​வாகி​கள் மூன்று பேருக்​​குள் பிரச்​​சினை இருப்​​ப​​தாகச் சிலர் திட்​​ட​மிட்டு அவதூறான கருத்​​துக்​​களைப் பரப்பி வரு​கி​றார்​​கள். உண்​​மை​யில், தி.நகர் தொகு​தி​யில் போட்​​டி​யிட வேண்​​டும் என்​​பது​​தான் புஸ்ஸி ஆனந்​​தின் தனிப்​​பட்ட விருப்​​ப​​மாக இருந்​​தது.

அந்த விருப்​​பத்​​தைத் தலை​மை​யிடம் அவர் முறைப்​​படி தெரி​வித்​​​தார்; தலை​வ​ரும் அதற்​​குப் பச்​​சைக்​​கொடி ​காட்​​டியதையடுத்​​து, தற்​​போது அங்கு அவர் தீவிர​​மாகக் களப்​​பணி​களை மேற்​​கொண்டு வரு​கி​றார். தமி​ழக வெற்​​றிக்​ கழகத்​​திற்​​குள்​ எந்​​த​வித​​மான கோஷ்டி பூசலும்​ இல்​​லை,” என்​று ​திட்​​டவட்​​ட​​மாகத்​ தெரிவித்​​தனர்​.

உட்கட்சி அரசியலால் விரக்தியில் புஸ்ஸி ஆனந்த்?
டெல்லியில் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் 7 மணி நேரம் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in