சேலம், மதுரை, கோவையில் ‘பஸ் போர்ட்’ திட்டம் வருமா? - மக்கள் கோரிக்கை

சேலம், மதுரை, கோவையில் ‘பஸ் போர்ட்’ திட்டம் வருமா? - மக்கள் கோரிக்கை
Updated on: 
2 min read

சேலம்: சேலம், மதுரை, கோவை மாவட்​டங்​களில் கடந்த 2018-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் அறிவிக்​கப்​பட்டு கிடப்​பில் உள்ள பஸ் போர்ட் திட்​டத்தை காலத்​தின் தேவை கருதி தமிழக அரசு செயல்​படுத்த வேண்​டும் என மக்​கள் எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​ற​னர்.

சேலம், கோவை, மதுரை மாவட்​டங்​களில் விமான நிலை​யத்​தில் (ஏர்​போர்ட்) உள்​ளதைப் போல அதிநவீன தொழில்​நுட்​பத்​துடன் கூடிய அனைத்து வசதி​களும் உள்​ளடக்​கிய “பஸ் போர்ட்” அமைக்​கப்​படும் என கடந்த 2018-ம் ஆண்டு அதி​முக ஆட்​சி​யில் அப்​போதைய முதல்​வர் பழனி​சாமி அறி​வித்​தார். இதற்​காக 3 மாவட்​டங்​களி​லும் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டது.

ஆனால், அடுத்து வந்த திமுக அரசு பஸ் போர்ட் திட்​டத்தை கண்டு கொள்​ளாமல் கிடப்​பில் போட்​டது. தற்​போது, தவெக அரசு பொறுப்​பேற்​றுள்ள நிலை​யில் கைவிடப்​பட்ட சேலம், மதுரை, கோவை பஸ் போர்ட் திட்​டத்​துக்கு புத்​து​யிர் கொடுக்​கப்​படுமா என பொது​மக்​கள் எதிர்​பார்த்து காத்​திருக்​கின்​ற​னர்.

இதுகுறித்து சமூக ஆர்​வலர்​கள் கூறிய​தாவது: வேக​மாக வளர்ந்து வரும் மாவட்​டங்​களான சேலம், மதுரை, கோவை​யில் தற்​போதுள்ள பேருந்து நிலை​யங்​கள் இடப்​பற்​றாக்குறை, சுகா​தார சீர்​கேடு, ஆக்​கிரமிப்பு கடைகள் என பல வகை​களி​லும் மக்​கள் சிரமத்​துடன் பயன்​படுத்​தும் நிலையே உள்​ளது. பஸ் போர்ட் திட்​டம் மூலம் குளி​ரூட்​டப்​பட்ட காத்​திருப்பு அறை​கள், உணவகங்​கள், வணிக வளாகங்​கள், எஸ்​கலேட்​டர்​கள் மற்​றும் இலவச வைஃபை வசதி, மாற்​றுத்​திற​னாளி​களுக்​கான சிறப்பு வசதி​கள், குழந்​தைகள் விளை​யாட இடம், பேருந்​துகள் வரு​கை, புறப்​பாடு குறித்த நேரலைத் திரைகள் உள்​ளிட்ட அம்​சங்​கள் கிடைக்​கும். பஸ் போர்ட் திட்​டத்​துக்கு மத்​திய அரசு 40 சதவீதம் நிதி உதவி வழங்​கு​கிறது.

கோவை​யில் கடந்த சில ஆண்​டு​களாகப் பல்​வேறு நிர்​வாகக் காரணங்​களால் நிறுத்தி வைக்​கப்​பட்​டிருந்த பஸ் போர்ட் திட்​டம், தற்​போது புதிய மாற்​றங்​களு​டன் திருத்​தப்​பட்ட மதிப்​பீட்​டில் மீண்​டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. கோவை மாநக​ராட்​சி​யின் வெள்​ளலூர் பகு​தி​யில் சுமார் 61.62 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த முனை​யம் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் இந்த நடவடிக்​கை​யில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது.

அதே​போல, சேலம் மாநகரின் ஜாகீர் அம்​மா​பாளை​யம் பகு​தி​யில் 60 ஏக்​கரில் பஸ் போர்ட் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதற்​காக ரூ.1,600 கோடி திட்​ட​மிடப்​பட்​டு, இத்​தொகை​யில் அரபிக் கல்​லூரி முதல் அயோத்​தி​யாப்​பட்​ட​ணம் வரையி​லான ரிங் ரோடு திட்​ட​மும் அடங்​கு​வ​தாக இருந்​தது. இதன் மூலம் பெங்​களூரு மற்​றும் சென்னை பேருந்​துகள் நகருக்​குள் வரா​மல் நேரடி​யாக பஸ் போர்ட்டை அடை​யும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் திட்​டம் முடங்​கி​யுள்​ளது.

இது​போல, மதுரை​யில் கரடிக்​கல், கே. புதுப்​பட்​டி, மேலக்​கு​யில்​குடி, அம்​பல​காரன்​பட்டி மற்​றும் மாட்​டுத்​தாவணி​யின் பின்​புறம் என 5 இடங்​கள் பஸ் போர்ட் திட்​டத்​துக்​காக பரிசீலிக்​கப்​பட்​டன. சுமார் 50 முதல் 60 ஏக்​கர் நிலப்​பரப்​பில் பஸ் போர்ட் திட்​டம் அமைக்க ஆயத்​தப்​படுத்​தப்​பட்ட நிலை​யில், அத்​திட்​டம் கைவிடப்​பட்​டுள்​ளது.

பல்​வேறு அரசி​யல் காரணங்​களால் முடங்​கி​யுள்ள பஸ் போர்ட் திட்​டத்தை தவெக அரசு செயல்​படுத்த வேண்​டும். மக்​கள் நெருக்​கம், போக்​கு​வரத்து நெருக்​கடி உள்​ளிட்ட காரணங்​களால் திட்​டத்தை அரசு விரைந்து செயல்​படுத்த வேண்​டும்.இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

சேலம், மதுரை, கோவையில் ‘பஸ் போர்ட்’ திட்டம் வருமா? - மக்கள் கோரிக்கை
‘சொத்து விவரம் எதையும் மறைக்கவில்லை’ - முதல்வர் விஜய் தரப்பு வாதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in