அண்ணன் - தம்பி வேட்பாளர்களால் களைகட்டிய ஆண்டிபட்டி தொகுதி!

மகாராஜன், லோகிராஜன்

மகாராஜன், லோகிராஜன்

Updated on
1 min read

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தொகுதியில் 3-ம் முறையாக அண்ணன்-தம்பி வேட்பாளர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்கி உள்ளனர்.

ஆண்டிபட்டி சட்டப்பேரவை தொகுதி கடந்த 3 தேர்தல்களாக மாநில அளவிலான கவன ஈர்ப்பை பெற்று வருகிறது. காரணம் இங்கு எதிரெதிர் அணியில் போட்டியிட்டு வரும் உடன்பிறந்த அண்ணன், தம்பி வேட்பாளர்கள்தான்.

அண்ணனான மகாராஜன் திமுகவிலும், தம்பி லோகிராஜன் அதிமுக சார்பிலும் கடந்த 2019 இடைத்தேர்தலில் களம் இறங்கினர். அண்ணன், தம்பி என்ற அடையாளம் இத்தொகுதியை பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

இதில் தம்பி தோல்வி அடைய, மீண்டும் 2021-ல் இதே சகோதரர்கள் எதிரெதிர் அணியில் களம் இறங்கினர். இதிலும் அண்ணன் மகாராஜனே வெற்றி பெற்றார். இந்நிலையில் இந்த தேர்தலிலும் 3-ம் முறையாக இருவரும் எதிரெதிர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த தேர்தலில் 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பி வெற்றி வாய்ப்பை இழந்தார். இம்முறை கூட்டணியில் அமமுக உள்ளதால் 3-ம் முறையில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் அவர் உள்ளார்.

அதேவேளையில் 2 முறை வெற்றிபெற்று இத்தொகுதிக்கு வளர்ச்சிப் பணிகளை செய்துள்ளதால் ஹாட்ரிக் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் அண்ணன் வேட்பாளரும் உள்ளார்.

இருதரப்பிலும் எதிர்பார்ப்பும், களப்பணியும் சூடுபிடித்துள்ளதால் தமிழக அளவில் இத்தொகுதி கூடுதல் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

<div class="paragraphs"><p>மகாராஜன்,&nbsp;லோகிராஜன்</p></div>
வட கொரியா - சீனா இடையே 6 ஆண்டுகளுக்குப் பின் விமான சேவை தொடக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in