கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்ய பாஜக மாநில பொருளாளர் வலியுறுத்தல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்ய பாஜக மாநில பொருளாளர் வலியுறுத்தல்
Updated on: 
1 min read

சென்னை: ‘கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ என்று தமிழக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 56 பேர் உயிரிழந்தனர்.

500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், பலர் நிரந்தர ஊனமுற்றனர். இந்தச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை பெற்ற 5 பேர், சொந்தக் காரணங்கள் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மனிதாபிமான அடிப்படையில் 60 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் மற்றும் நிரந்தர ஊனமுற்றோரின் துயரங்களைக் கருத்தில் கொள்ளாமல், குற்றவாளிகளுக்குப் பரோல் வழங்குவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும்.

நவ.8 தீபாவளி வரப்போகிறது. ஏற்கெனவே கோவையில் 2022 அக்.23-ம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் குண்டுவெடித்தது என்பது நினைவுகூரத்தக்கது.

எனவே, 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை உடனடியாக ரத்து செய்து அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு வழங்கிய பரோலை ரத்து செய்ய பாஜக மாநில பொருளாளர் வலியுறுத்தல்
தவெக அரசு நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை? - கனிமொழி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in