வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தேர்தல் அதிகாரிக்கு பாஜக கடிதம்

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தேர்தல் அதிகாரிக்கு பாஜக கடிதம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்ட தேர்​தல் அதி​காரிக்கு, பாஜக மாநில செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன் அனுப்​பி​யுள்​ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: வாக்காளர் படிவம்-6 என்​பது புதிய வாக்காளர்களுக்காக மட்​டுமே பயன்​படுத்​தப்பட வேண்​டும்.

ஏற்​கெனவே வாக்​காள​ராக இருந்த ஒரு​வர், தனது பெயர் விடு​பட்​டதற்​காக மீண்​டும் இப்​படிவத்​தைப் பூர்த்தி செய்து வழங்​கி​னால், அது மக்​கள் பிர​தி​நி​தித்​து​வச் சட்​டம் 1950 பிரிவு 31-ன்​படி தவறான அறி​விப்பு செய்​த​தாக கருதப்​பட்டு, தண்​டனைக்​குரிய குற்​ற​மாக மாற வாய்ப்​புள்​ளது.

இதுகுறித்து டிச.20-ம் தேதி தேர்​தல் ஆணைய பார்​வை​யாளர் முன்​னிலை​யில் முறை​யிட்​ட​போது, இந்த பிரச்​சினைக்கு விரை​வில் தீர்வு காணப்​படும் என உறு​தி​யளிக்​கப்​பட்​டது. ஆனால் படிவம் 6 மட்டுமே விநி​யோகிக்கப்பட்டு வரு​கிறது.

இதனால் விண்​ணப்​பங்​கள் நிராகரிக்​கப்​பட​வும், எதிர்க்​கட்​சிகளின் விண்​ணப்​பங்​கள் திட்​ட​மிட்டு தவிர்க்​கப்​பட​வும் வாய்ப்​புள்​ள​தாகத் தெரி​கிறது.

எனவே 2025 வரைவுப் பட்​டியலிலிருந்து நீக்​கப்​பட்ட வாக்காளர்கள் எந்த படிவத்​தைப் பயன்​படுத்தி விண்​ணப்​பிக்க வேண்​டும் என்​பதை தேர்​தல் ஆணை​யம் உடனடி​யாகத் தெளிவுபடுத்த வேண்​டும்.

இந்த குழப்​பத்​தால் தகு​தி​யுள்ள வாக்காளர்கள் பாதிக்​கப்​படு​வதைத் தவிர்க்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு: தேர்தல் அதிகாரிக்கு பாஜக கடிதம்
யார் எத்தகைய வியூகம் அமைத்தாலும் பாஜக கூட்டணியை தமிழகம் தோற்கடிக்கும்: மு.வீரபாண்டியன் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in