மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியை கண்டித்து தஞ்சாவூரில் பாஜக சார்பில் ஆக.1-ல் பேரணி, பொதுக்கூட்டம்

மேகேதாட்டு பகுதி.
மேகேதாட்டு பகுதி.
Updated on
1 min read

தஞ்சாவூர்: கர்​நாடக அரசு காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்​டு​வில் அணை கட்​டும் முயற்​சியை கண்​டித்​து, தஞ்​சாவூரில் பாஜக சார்​பில் ஆக.1-ம் தேதி பேரணி, பொதுக்​கூட்​டம் நடை​பெற உள்​ளது.

இதுகுறித்து அக்​கட்​சி​யின் மாநில பொதுச் செய​லா​ளர் கருப்பு எம்​.​முரு​கானந்​தம் தஞ்​சாவூரில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: கர்​நாடக அரசு மேகே​தாட்​டு​வில் காவிரி​யின் குறுக்கே அணை கட்​டியே தீரு​வோம் என்ற உறு​தி​யுடன் செயல்​பட்டு வரு​கிறது. அப்​படி அணை கட்​டி​னால், டெல்டா மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படும்.

எனவே, கர்​நாடக அரசின் மேகே​தாட்டு அணை கட்​டும் முயற்​சியை கண்​டித்​தும், தமிழகத்​தில் காங்​கிரஸ் கூட்​ட​ணி​யுடன் ஆட்​சி​யில் உள்ள தவெக அரசு, மேகே​தாட்டு அணை தொடர்​பான கோரிக்​கைகளை வலிமை​யாக கட்​டமைக்க தவறியதை கண்​டித்​தும் தஞ்​சாவூரில் பாஜக சார்​பில் ஆக.1-ம் தேதி பேரணி​யும், கண்டன பொதுக்​கூட்​ட​மும் நடத்​தப்பட உள்​ளது.

அதே​போல, வறட்​சி​யால் டெல்டா மாவட்​டங்​கள் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளன. எனவே, இந்த மாவட்​டங்​களை வறட்​சி​யால் பாதிக்​கப்​பட்ட மாவட்​டங்​களாக அறிவிக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்​டும். தேர்​தல் கால வாக்​குறு​திபடி விவசாயிகளின் அனைத்து கூட்​டுறவு கடன்​களை​யும் தமிழக அரசு தள்​ளு​படி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார். உடன் தஞ்​சாவூர் தெற்கு மாவட்​டத் தலை​வர் பி.ஜெய்​சதீஷ், வடக்கு மாவட்ட அமைப்​பாளர் பூண்டி வெங்​கடேசன் உள்​ளிட்​டோர்​ உடனிருந்​தனர்​.

மேகேதாட்டு பகுதி.
“எரிபொருள் விநியோக நெருக்கடியிலும் இந்திய வளர்ச்சி தடைபடவில்லை” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in