“திமுகவுக்கு ஜால்ரா போடுபவர்கள்தான் காங்கிரஸ் கட்சியினர்!” - அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

Updated on
1 min read

வேலூர்: “காங்கிரஸ் கட்சியினர் டெல்லிக்கும், திமுகவுக்கும் ஜால்ரா போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழக மக்களுக்காக பேசும் காங்கிரஸ்காரர்கள் யாரும் இல்லை” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா புழக்கம், வன்முறை அதிகமாகி இருக்கிறது.

கஞ்சா புழக்கத்தால் இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், மடைமாற்றம் செய்வதற்கு, முதல்வர் மத்திய அரசின் மீது பழி போடும் விதமாக பேசிவருகிறார். வெளிநாட்டில் இருந்து வரும் போதைப் பொருளைத்தான் மத்திய அரசு தடுக்கும்.

‘நான் தமிழக முதல்வராக கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தோற்றுவிட்டேன்’ என முதல்வர் ஒப்புக்கொள்ளட்டும். அதை விடுத்து, சாக்குபோக்கு சொல்லிவிட்டு மத்திய அரசு மீது பழிபோடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழகத்தில் இரண்டு குழுக்கள்தான் இருக்கிறது. ஒரு குழு டெல்லிக்கு ஜால்ரா அடிக்கிறது. மற்றொரு குழு முதல்வர் ஸ்டாலினுக்கு ஜால்ரா அடிக்கிறது. காங்கிரஸ் கட்சியின் கடையை சாத்திவிடலாம். அது அழிந்து வரும் கட்சி. அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவரே ஒரு சான்று.

ஒருவேளை விஜய்யுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், ப.சிதம்பரம் தனி கட்சி அமைத்து திமுகவுடன் கூட்டணி வைப்பார். காலையில் தான் இது குறித்து ஒரு நாளிதழில் படித்தேன். இன்றைக்கு இருப்பது இந்திரா காங்கிரஸ்.

தூய்மை பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு கைதுதான். ஆனால் முதல்வர் ஸ்டாலின் வேறு உலகத்தில் இருக்கிறார். திமுக ஆட்சி வேண்டாம் என மக்கள் நினைத்துவிட்டார்கள். மக்களே தெளிவான முடிவை தருவார்கள்” என்று அண்ணாமலை கூறினார்.

<div class="paragraphs"><p>அண்ணாமலை</p></div>
“சிறுபான்மையினர் வாக்குக்காக திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - ராம. சினிவாசன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in