இந்து அமைப்பினரை கைது செய்வதா? - பாஜக வழக்கறிஞர்கள் கண்டனம்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

மதுரை: திருப்​பரங்​குன்​றத்தில் நேற்று முன்தினம் இரவு போலீ​ஸாரை பணி செய்​ய​வி​டா​மல் தடுத்​தது, பொது சொத்​துக்கு சேதம் விளை​வித்​தது உள்ளிட்ட 8 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து, முத்​து​முரு​கன் உட்பட 12-க்​கும் மேற்​பட்​டோரை திருப்​பரங்​குன்​றம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், பாஜக வழக்​கறிஞர்​கள் திருப்​பரங்​குன்​றம்காவல் நிலை​யத்​துக்கு நேற்று சென்​றனர். ஆனால், கைது செய்யப்பட்டவர்களை பார்க்க அனு​ம​திக்காமல், காவல்நிலைய கதவு​களை அடைத்​த​தாக கூறப்​படுகிறது.

இதுகுறித்து பாஜக வழக்​கறிஞர்​கள் ரமேஷ் பாண்​டியன், அய்​யப்​ப​ராஜா உள்​ளிட்​டோர் கூறும்​போது, "நீ​தி​மன்ற உத்​தர​வின்​படி, திருப்​பரங்​குன்​றம் மலை​யில் கார்த்​திகை தீபம் ஏற்ற இந்து அமைப்​பினர் நேற்று முன்​தினம் மாலை கூடிய​போது, காவல் துறை​யினர் தடுத்​த​தால் தள்​ளு​முள்ளு ஏற்​பட்​டது.

இதையடுத்​து, நள்​ளிர​வில் 12-க்​கும்மேற்​பட்​டோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​களை காவல் நிலை​யத்​தில் வழக்​கறிஞர்​கள் சந்​திக்​க​வும் அனு​ம​திக்​க​வில்​லை. இது மனித உரிமை மீறல். பாஜக, இந்து அமைப்​பைச் சேர்ந்​தவர்​கள் பொதுப் பிரச்​சினைக்​காக போ​ராடிய​வர்​கள். அவர்​களை கைது செய்​தது கண்​டிக்​கத்​தக்​கது" என்​றனர்​.

<div class="paragraphs"><p>திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றும் பிரச்சினை தொடர்பாக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பரங்குன்றம் ஜிஎஸ்டி சாலையில் நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்.படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி</p></div>
திருப்பரங்குன்றம் பகுதியில் கடும் பதற்றம்: நயினார் நாகேந்திரன் கைது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in