நன்செய் நிலங்களை மேம்படுத்த நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அனுமதி: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்

நன்செய் நிலங்களை மேம்படுத்த நகர ஊரமைப்பு இயக்குநருக்கு அனுமதி: சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்​தில் நன்​செய் நிலங்​களை மேம்​படுத்த நகர ஊரமைப்பு இயக்​குநருக்கு அதி​காரம் வழங்​கும் வகை​யில் சட்​டத்​திருத்​தம் மேற்​கொள்​வதற்​கான மசோதா நேற்று சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

சட்​டப்​பேர​வை​யில், நேற்று வீட்​டு​வச​தித் துறை அமைச்​சர் ப.ராஜ்கு​மார் தாக்​கல் செய்த சட்ட மசோ​தா​வில் கூறி​யிருப்​ப​தாவது: நகர்ப்​புற வளர்ச்​சிக் குழு​மங்​கள், நகரத் திட்​ட​மிடல், உள்​கட்​டமைப்பு மேம்​பாடு, நில மேம்​பாடு, வளர்ச்​சித் திட்​டங்​களைச் செயல்​படுத்​துதல், நகர்ப்​புற வளர்ச்​சியை ஒழுங்​குபடுத்​துதல் போன்ற பல்​வேறு பணி​களை மேற்​கொண்டு வரு​கின்​றன.

தற்​போது நகர்ப்​புற வளர்ச்​சி​யின் அளவும், அதன் சிக்​கல் தன்​மை​களும் அதி​கரித்​துள்​ளன. இதைக் கருத்​தில்​கொண்​டு, இப்​பணி​களுக்கு தொடர்ச்​சி​யான மற்​றும் அர்ப்​பணிப்​புள்ள கவனம் செலுத்​து​வதும், உரிய நேரத்​தில் முடிவு​களை எடுப்​பதும் அவசி​ய​மாகிறது.

தலைவர், உறுப்பினர்: எனவே, நகர்ப்​புற மேம்​பாட்டுக் குழு​மங்​களின் நிறுவன கட்​டமைப்பை வலுப்​படுத்​தும் வகை​யில், முழுநேரத் தலை​வரை​யும், உறுப்​பினர் செயலரை​யும் நியமிப்​பது அவசி​ய​மாகிறது. இதன்​மூலம் அவர்​களுக்கு ஒப்​படைக்​கப்​பட்​டுள்ள கடமை​கள் மற்​றும் செயல் பணி​களில் அதிக கவனம், தொடர்ச்​சி​யான செயல்​பாடு மற்​றும் பொறுப்​புடைமை ஆகிய​வற்றை உறு​தி​செய்ய இயலும். அதே​நேரம் மாவட்ட நிர்​வாகத்​துடன் பயனுள்ள ஒருங்​கிணைப்பை உறுதி செய்ய மாவட்ட ஆட்​சி​யர், ஆணை​யத்​தின் உறுப்​பின​ராக தொடர்ந்து செயல்​படு​வார்.

மேலும், திட்​டப் பகுதி அல்​லாத பிற பகு​தி​களில் உள்ள நில மேம்​பாட்​டுக்​கான அனு​ம​தியை முன்​ன​தாக, உள்​ளாட்சி அதி​கார அமைப்​பானது, இயக்குநரின் முன்​அனு​ம​தி​யைப் பெறு​வதை கட்​டாயப்​படுத்​துகிறது. மேலும், நன்​செய் நிலங்​களை பொறுத்​தவரை தொடர்​புடைய மாவட்ட ஆட்​சி​யரின் முன் ஒப்​புதலை​யும் பெற வேண்​டியது அவசி​ய​மாகும்.

காலதாமதம்: இந்த நடை​முறை​யின் காரண​மாக திட்ட அனு​ம​திக்​கான விண்​ணப்​பங்​களைப் பரிசீலித்து அவற்றை முடி​வெடுப்​ப​தில் தேவையற்ற கால​தாமதங்​கள் ஏற்​பட்​டன. நில மேம்​பாட்​டுக்​கான அனு​மதி வழங்​கும் நடை​முறையை எளிமைப்​படுத்​த​வும், நடை​முறை சார்ந்த கால​தாமதங்​களை குறைக்​க​வும் அத்​தகைய அனு​ம​தி​யைப் பெறு​வதற்​கான செயல்​முறையை எளி​தாக்​க​வும், திட்​டப்​பகுதி இல்​லாத பகு​தி​களில் நன்​செய் நிலங்​களை மேம்​படுத்த மாவட்ட ஆட்​சி​யரின் முன் ஒப்​புதலைப் பெற வேண்​டும் என்ற தேவையை நீக்​கி, உள்​ளாட்சி அமைப்​புக்கு முன் ஒப்​புதல் வழங்​கும் அதி​காரத்தை இயக்​குநருக்கு வழங்க அரசு முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக நகர ஊரமைப்பு சட்​டத்​தில் திருத்​தம் செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு அந்த மசோ​தா​வில்​ கூறப்​பட்​டுள்​ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in