தட்டுப்பாடு ஏற்படும் சூழல்களில் வெளிமாநிலத்துக்கு கனிமங்கள் கொண்டுசெல்ல தடை: தமிழக அரசு உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ‘தமிழகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும்போது, வெளிமாநிலங்களுக்கு கனிமங்கள் கொண்டுசெல்ல தற்காலிக தடை விதிக்கலாம்’ என்று தமிழக அரசு உத்தர விட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து பிறமாநிலங்களுக்கு கட்டுமான பயன்பாட்டுக்கான கற்கள், எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை ஒழுங்குபடுத்தும் வகையில், தமிழக அரசு விதிமுறைகளை திருத்தம் செய்துள்ளது. இதற்கான அரசாணை ஜூலை 9-ம் தேதி வெளியான அரசிதழில் வெளியிடப்பட்டுள் ளது. இந்த உத்தரவை இயற்கை வளங்கள் துறை செயலர் சுன்சோங்கம் ஜடக் சிரு பிறப்பித் துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டவிரோத சுரங்கம், போக்குவரத்து, சேமிப்பு மற்றும் கனிமவிற்பனையாளர் விதிகள் 2011-ல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் சட்டத்தின்கீழ் விதி 3-க்கு அடுத்ததாக 3ஏ - பிற மாநிலங்களுக்கு கற்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் செல்லுதல் என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது.

இயக்குநருக்கு அதிகாரம்: அதாவது, கருங்கற்கள், பெரிய கல் துண்டுகள், பாறாங்கற்கள், எம்-சாண்ட், ஜல்லிக்கற்கள், அரவைக்கற்கள், கைக்கல் அரவை, கட்டிடம் மற்றும் சாலையமைப்புக்கான கற்கள் என அனைத்து விதமான கட்டுமான கற்களையும் பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் முறைப்படுத்தி, போக்குவரத்தையும் கண்காணிக்க அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தின் தேவைக்கு போதிய அளவு இந்த பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய, தேவையெனில் பிற மாநிலங்களுக்கு இவற்றை எடுத்துச்செல்ல தற்காலிக தடை விதிக்கும் அதிகாரமும் இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கட்டுமானத் துறைக்கு தேவையான கனிம வளங்களின் தட்டுப்பாட்டை தவிர்த்து, விலையேற்றத்தை கட்டுப்படுத்தி, தடையற்ற விநியோகம் கிடைப்பதை உறுதிசெய்வதே இந்த திருத்தத்தின் நோக்கம் என்று கூறப்பட் டுள்ளது.

27 பேர் பணியிட மாற்றம்: இதுதவிர, தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் நிர்வாக காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் பணியாற்றி வந்த 2 துணை இயக்குநர்கள் மற்றும் 25 உதவி இயக்குநர்கள் என மொத்தம் 27 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் டி.பிரபு ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

அதில் கடலூர், சிவகங்கை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், தேனி, விழுப்புரம், வேலூர், திருச்சி, திருவாரூர், நாமக்கல், கன்னியாகுமரி, தென்காசி, சென்னை, அரியலூர், திருப்பூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த அதிகாரிகள் புதிய பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
“இசை உலகில் அழியாத முத்திரை பதித்தவர்” - எஸ்.ஜானகிக்கு முதல்வர் விஜய் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in