தமிழ்நாடு உளவுப் பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமனம்

தமிழ்நாடு உளவுப் பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமனம்
Updated on
1 min read

சென்னை: தமிழ்நாடு உளவுப் பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறைச் செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஜிபியாக இருந்த பி.பால நாகதேவி, உளவுப்பிரிவு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு டிஜிபி பதவி, கூடுதல் டிஜிபி நிலைக்கு குறைக்கப்பட்டு, பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக உள்ள சந்தோஷ்குமார் வசம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, அதே துறையின் கூடுதல் டிஜிபி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உளவுப் பிரிவு டிஜிபியாக பால நாகதேவி நியமனம்
எங்கே இருக்கிறார் நெதன்யாகு? - ‘ஆறு விரல்’ வீடியோவால் சர்ச்சை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in