

செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் | கோப்புப் படம்
சென்னை: தவெக எம்எல்ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதியப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன்ஜாமீன் பெற்றார்.
தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக திருவல்லிக்கேணி போலீஸார் பலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி ,அவரது சகோதரர் அசோக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.
அதன்படி செந்தில்பாலாஜி கடந்த 24 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரண் அடைந்து முன்ஜாமீன் பெற்றார். அவரது சகோதரர் அசோக்குமார் நேற்று இதே நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிணைத் தொகையை செலுத்தினார்.
அதையடுத்து நீதிபதி எஸ்.கார்த்திகேயன், உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி காலை, மாலை என இருவேளைகளிலும் திருவல்லிக்கேணிபோலீஸார் முன் ஆஜராக அசோக்குமாரை அறிவுறுத்தி முன்ஜாமீன் வழங்கினார்.