தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உட்பட 9 பேருக்கு ஜாமீன்: 3 பேரின் மனு மீது இன்று விசா​ரணை

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா | கோப்புப் படம்

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா | கோப்புப் படம்

Updated on: 
1 min read

தாராபுரம்: முதல்​வர் வருகை​யின்​போது போராட்​டத்​தில் ஈடு​பட்​ட​தாக கைது செய்​யப்​பட்ட தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் கார்த்​திகா உள்​ளிட்ட 9 பேரை ஜாமீனில் விடுத்து நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் தொகுதி இடைத்​தேர்​தலில் முதல்​வர் விஜய் கடந்த 4-ம் தேதி பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது நிகழ்ந்த சாலை மறியல், காவல் நிலைய முற்​றுகை உள்​ளிட்ட பல்​வேறு சம்​பவங்​கள் தொடர்​பாக, நாம் தமிழர் கட்​சி​யின் வேட்​பாளர் கார்த்​திகா, அவரது கணவர் முருக சந்​திரகுமார், நிர்​வாகி​கள் இசை மதிவாணன், கந்​தசாமி, சூர்யா, சஞ்​சய் காந்தி, விக்​னேஷ், ஷேக்​பரித் உள்​ளிட்ட 12 பேரை தாராபுரம் போலீ​ஸார் கடந்த 2 நாட்​களுக்கு முன்பு கைது செய்​தனர். பின்​னர், அவர்​கள் நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், 12 பேரும் ஜாமீன் கோரி தாராபுரம் நீதித்​துறை நடுவர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர். இந்த மனுக்​கள் மீதான விசா​ரணை நேற்று நடை​பெற்​றது. இதில், கார்த்​திகா, அவரது கணவர் முருக சந்​திரகுமார் உள்​ளிட்ட 9 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உமா மகேஸ்வரி உத்​தர​விட்​டார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய நாகர்​கோவில் வெங்​கடேஷ், சென்​னை கோகுல், கோவை மோகன்​பிரசாத் ஆகிய 3 பேரின் ஜாமீன் மனு மீதான விசா​ரணை இன்று நடை​பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா | கோப்புப் படம்</p></div>
‘தேசவிரோத கருத்துகளை பரப்பக் கூடாது’ - டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in