மனிதநேயம் மிக்கவர்களாகவும் மருத்துவர்கள் இருக்க வேண்டும்: சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் வேண்டுகோள்

மியாட் மருத்துவமனையில் விபத்து காய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவ மனை சார்பில் நடைபெற்ற உலக விபத்து காய தின விழிப்புணர்வு  நிகழ்வில் சட்டப்​பேரவை தலைவர் ஜேசிடி பிர​பாகருக்கு மருத்துவமனை நிறுவனர் பி.வி.ஏ.மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் உள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவ மனை சார்பில் நடைபெற்ற உலக விபத்து காய தின விழிப்புணர்வு  நிகழ்வில் சட்டப்​பேரவை தலைவர் ஜேசிடி பிர​பாகருக்கு மருத்துவமனை நிறுவனர் பி.வி.ஏ.மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் உள்ளார்.

Updated on: 
1 min read

சென்னை: மருத்துவர்கள் மக்​களின் உயிரை காப்​பவர்​களாக மட்​டும் செயல்​படா​மல், மனிதநேயம் காப்​பவர்​களாகவும் இருக்க வேண்​டும் என்று சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் கூறினார்.

சென்னை கிண்டி அடுத்த மணப்​பாக்​கத்​தில் உள்ள மியாட் இன்​டர்​நேஷனல் மருத்​து​வ​மனை சார்​பில் உலக விபத்து காய தின விழிப்​புணர்வு நிகழ்ச்சி மருத்​து​வ​மனை​யில் நேற்று நடை​பெற்​றது. மருத்​து​வ​மனை​யின் நிர்​வாக இயக்​குநர் மருத்​து​வர் பிரித்வி மோகன்​தாஸ் தலை​மையில் நடந்த நிகழ்வை, சட்​டப்​பேரவை தலை​வர் ஜேசிடி பிர​பாகர் தொடங்கி வைத்​தார்.

அவசர சிகிச்சை மருத்​துவ நிபுணர்​கள், மருத்​து​வத் துறை​யினர் நிகழ்​வில் பங்​கேற்​றனர். முன்​னதாக, மருத்​து​வ​மனை நிறு​வனர் மருத்​து​வர் பி.வி.ஏ.மோகன்​தாஸ், ஜே.சி.டி.பிர​பாகருக்கு நினைவுப் பரிசு வழங்​கினார். மருத்​து​வ​மனை தலை​வர் மல்​லிகா மோகன்​தாஸ் உடன் இருந்​தார்.

இந்த நிகழ்​வில் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சிடி.பிர​பாகர் பேசிய​தாவது: மருத்​து​வத் துறையை மேம்​படுத்த தமிழக அரசு பல்​வேறு நட​வடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. குறிப்​பாக, அரசு மருத்​து​வ​மனைகளின் குறைபாடுகளை முழு​மையாக போக்​கு​வதற்கு பாடு​பட்டு வரு​கிறது.

முன்​னாள் முதல்​வர் எம்​ஜிஆர் ஒரு​முறை என்னை அழைத்​துக்​கொண்டு காரில் சென்​றபோது, சாலையை கடக்க பாதசா​ரி​கள் காத்​திருந்​தனர்.

அதை பொருட்​படுத்​தாமல், எங்​கள் காரின் ஓட்​டுநர் வாக​னத்தை செலுத்​தினார். அப்​போது ஓட்​டுநரை எம்​ஜிஆர் கண்​டித்​தார். சாலை விதி​களை அனைவரும் மதிக்க வேண்​டும் என அவருக்கு அறி​வுறுத்​தினார்.

அதே பண்​புடன், எம்​ஜிஆர் மாதி​ரியே தற்​போதைய முதல்​வர் விஜய் உள்​ளார். தனது வாக​னம் செல்​லும்​போது, பொது​மக்​கள் பாதிக்​கக்​கூடாது என்​ப​தற்​காக அவர் வரும் வழி​யில் எந்த வாக​னமும் நிறுத்​தப்​படுவதில்லை. இந்த முயற்​சியை இதற்கு முன்​னால் எவருமே செய்​ய​வில்லை.

விபத்து என்​பது ஒரு தனி மனிதருடன் நிற்​ப​தில்லை. அவரது குடும்​பத்தை உளவியல் ரீதி​யாகவும், பொருளாதார ரீதி​யாகவும் பாதிக்​கிறது. அத​னால், அதை உணர்ந்து அனைவரும் செயல்​பட வேண்​டும்.

மருத்​து​வத்​துறை மகத்​தானது. மருத்துவர்கள் மக்​களின் உயிரை காப்​பவர்​களாக மட்​டும் செயல்​படா​மல், மனிதநேயம் காப்​பவர்​களாகவும் இருக்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

நிகழ்​வில் பேசிய மருத்​து​வர் பிரித்வி மோகன்​தாஸ், “எதிர்​பாராத விபத்​துகள், அனைவரை​யுமே நிலைகுலை​யச் செய்​து​விடும். விபத்​துகளை தவிர்க்க சாலை விதி​களை பின்​பற்ற வேண்​டும். மேலும் அனைவரும் விபத்​துக் காப்​பீடு வைத்​துக்​கொள்ள வேண்​டும்” என்​றார்.

<div class="paragraphs"><p>சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவ மனை சார்பில் நடைபெற்ற உலக விபத்து காய தின விழிப்புணர்வு&nbsp; நிகழ்வில் சட்டப்​பேரவை தலைவர் ஜேசிடி பிர​பாகருக்கு மருத்துவமனை நிறுவனர் பி.வி.ஏ.மோகன்தாஸ், நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ் உடன் உள்ளார்.</p></div>
வெற்றிப் பயணம் திட்டத்தில் இணைக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in