4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம்: சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணை நிறைவு

4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம்: சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணை நிறைவு
Updated on: 
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேரவைத் தேர்​தலில் அதிமுக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற முன்​னாள் எம்​எல்​ஏக்​கள் மரகதம் குமரவேல், ஜெயக்​குமார், சத்​யபாமா, இசக்கி சுப்​பையா ஆகியோர் பத​வியை ராஜினாமா செய்து தவெக​வில் சேர்ந்​தனர்.

இவர்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​படி நட​வடிக்கை எடுக்​கக் கோரி சட்டப்பேரவைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரிடம், அதிமுக புகார் அளித்​தது.

இதன் இறுதி​க்கட்ட விசா​ரணை நேற்று நடை​பெற்​றது. இதில் பேரவைத் தலை​வர் ஜேசிடி.பிர​பாகர் முன்பு இசக்கி சுப்​பையா, ஜெயக்​குமார், சத்​யபாமா, மரகதம் குமரவேல் ஆகியோர் சார்​பில் வழக்​கறிஞர்​கள் ஆஜராகி தங்​களின் இறுதி வாதங்​களை முன்​வைத்​தனர்.

4 எம்எல்ஏ.க்கள் பதவி விலகிய விவகாரம்: சட்டப்பேரவைத் தலைவரின் விசாரணை நிறைவு
ரூ.400 கோடி முறைகேடு வழக்கில் அன்பில் மகேஸ் ஜாமீன் மனு 17-க்கு தள்ளி வைப்பு

X