“பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விகுறியே” - செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.

Updated on: 
1 min read

கோவை: பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விகுறியாகவே இருக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று (நவ.22) கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “எந்தவொரு தலைமையிடம் மன்னிக்கும் தன்மையும், பெருந்தன்மையும் இல்லையோ, அந்தத் தலைமை நீண்ட காலம் நிலைத்து நின்ற வரலாறு கிடையாது.

அந்த வரலாறு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும் ஏற்படும். பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் நானும் பங்கேற்ற திருமண விழா எங்களது குடும்ப உறவினர் இல்ல விழாவாகும். அப்போது இருவரும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக் கொண்டு பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே பேசினோம். அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.

தவெகவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளதாக பழனிசாமி விமர்சித்திருக்கிறார். ஜாக்பாட் அடித்தது யாருக்கு என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைத்து ஜாக்பாட் அடிக்கலாம் என நினைத்தவர்தான் பழனிசாமி. ஆனால், தற்போது அவரது முகத்திரை கிழிக்கப்பட்டு, திரை விலக்கப்பட்டுள்ளது.

பழனிசாமி ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார். அவர் பொதுச்செயலாளராக இருக்கும் வரை, எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த இயக்கம் தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுகவின் எதிர்காலம் கேள்விகுறியாகவே இருக்கும்.

யாரையும் நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாக அவர் கூறி வருகிறார். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்பது வேறு, பழனிசாமி என்பது வேறு என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அதிமுகவில் எஸ்.பி. வேலுமணி முக்கியப் பொறுப்பாளராக இருந்து, ஒருவர் முதல்வராகவும் பொதுச்செயலாளராகவும் வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். இதை மறந்து தற்போது பேசிக் கொண்டிருக்கிறார்கள். காலம் அவருக்குப் பதில் சொல்லும். யாரையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது.

கொங்கு மண்டலத்தின் வெற்றி விஜய் கையில் உள்ளது. தனித்துப் போட்டியிட்டபோதே 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்ற பெருமை தவெகவக்கு உண்டு. கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை வெற்றி விஜய் தலைமையில்தான் பவனி வரும். பழனிசாமி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன்.</p></div>
முசிறி அருகே வேன் மரத்தில் மோதியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு

X