“விளாத்திகுளம் சம்பவத்தில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை கிடைப்பது உறுதி!” - கனிமொழி எம்.பி

கனிமொழி | கோப்புப்படம்
கனிமொழி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: “குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும்” என விளாத்திகுளம் சம்பவத்தில் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டது குறித்து திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவரை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல் துறை. அந்தச் சமூக விரோதி உச்சபட்ச தண்டனைப் பெறுவதை உறுதி செய்வதோடு, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு உரிய நீதி கிடைக்கவும், இந்தத் துயரிலிருந்து மீண்டு வரவும் துணையாக இருப்போம்.

குற்றவாளிகளைத் தண்டிப்பதை சட்டம் உறுதிசெய்யும். ஆனால், குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான சூழலை ஒரு சமூகமாக நாம் அனைவரும் சேர்ந்தே உறுதிப்படுத்த முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கனிமொழி | கோப்புப்படம்
5 தலைநகரங்கள் முதல் ‘அன்பான சர்வாதிகார ஆட்சி’ வரை: நாதக வாக்குறுதிகளின் முக்கிய அம்சங்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in