தவெக குதிரை பேரம் நடத்துகிறதா? -மத்திய அரசு கவனித்து வருவதாக அரவிந்த் மேனன் தகவல்

தவெக குதிரை பேரம் நடத்துகிறதா? -மத்திய அரசு கவனித்து வருவதாக அரவிந்த் மேனன் தகவல்
Updated on
1 min read

புதுக்கோட்டை: தமிழகத்​தில் தவெக குதிரை பேரம் நடத்​து​வ​தாக வரும் தகவல்​கள் குறித்து மத்​திய அரசு கூர்ந்து கவனித்து வரு​கிறது என தமிழக பாஜக மேலிட பொறுப்​பாளர் அரவிந்த் மேனன் தெரி​வித்​தார்.

புதுக்​கோட்​டை​யில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் தெரி​வித்​த​தாவது: இந்​தி​யா​வில் 50 ஆண்​டு​கள் ஆட்சி செய்த காங்​கிரஸ் செய்​யாத சாதனையை 12 ஆண்​டு​களில் பாஜக அரசு செய்​துள்​ளது. இந்​தி​யா​வில் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்​களும் வளர்ச்சி அடைந்​துள்​ளன. தவெக அரசின் செயல்​பாடு​கள் திருப்​தி​கர​மாக இல்​லை. திறனற்ற அரசாக உள்​ளது.

தமிழகத்​தில் ஆங்​காங்கே சிறு​பிள்​ளை​கள் முதல் முதி​ய​வர்​கள் வரை பாலியல் தொல்​லைகளுக்கு உள்​ளாக்​கப்​படும் சம்​பவங்​கள், மின்​வெட்டு மற்​றும் அரசி​யல் குழப்​பம் போன்ற பல்​வேறு சிக்​கல்​கள் உள்​ளன. இதனால், பொது​மக்​கள் பெரிதும் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். தமிழக அரசு குறித்து எந்த இடத்​தில் விமர்​சனம் செய்ய வேண்​டுமோ, அந்த இடத்​தில் பாஜக நிர்​வாகி​கள் விமர்​சனம் செய்​வார்​கள். தமிழக அரசுக்​கும், மத்​திய அரசுக்​கும் உள்ள உறவு போகப்​போகத்​தான் தெரி​யும்.

அதி​முக எம்​எல்​ஏக்​கள் தங்​களு​டைய பதவி​களை ராஜி​னாமா செய்​து​விட்டு தவெக​வில் இணைவது தொடர்​பாக, கட்​சி​யின் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் உள்ளிட்ட தலை​வர்கள் விளக்​கம் அளிப்​பார்​கள். தற்​போது உள்ள அரசி​யல் சூழ்​நிலை​யில் தவெக குதிரை பேரம் நடத்​து​வ​தாக வெளி​யாகும் தகவல்​கள் குறித்து மத்​திய அரசு கூர்ந்து கவனித்து வரு​கிறது. இவ்வாறு கூறினார்.

அப்​போது, கட்​சி​யின் மாநில பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம், மேற்கு மாவட்​டத் தலை​வர் என்​. ராமச்​சந்​திரன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர். பின்​னர், புதுக்​கோட்டை புதிய பேருந்து நிலை​யம் அரு​கில் உள்ள தனி​யார் மண்​டபத்​தில் நடை​பெற்ற பாஜக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் அவர் கலந்​துகொண்​டார்.

தவெக குதிரை பேரம் நடத்துகிறதா? -மத்திய அரசு கவனித்து வருவதாக அரவிந்த் மேனன் தகவல்
“பெண்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இருக்கக் கூடாது” - அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in