“மோடியின் ஆட்சி தமிழ் மொழியை திணிக்கும் ஆட்சி” - அர்ஜுன் சம்பத் பேச்சு

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
Updated on
1 min read

சென்னை: ​தி​ரா​விட மாடல் அரசு ஆங்​கிலத்தை திணிக்​கிறது என்​றும், பிரதமர் மோடி​யின் ஆட்சி தமிழ் மொழியை திணிக்​கும் ஆட்சி என்​றும் இந்து மக்கள் கட்சி தலை​வர் அர்​ஜுன் சம்​பத் பேசி​னார்.

இந்து மக்​கள் கட்சி சார்​பில், தமிழ் தமிழர் தமிழகம் மீட்பு மாநாடு ராயப்​பேட்​டை, ஒய்​எம்​சிஏ மைதானத்​தில் நேற்று நடந்​தது. இந்து மக்​கள் கட்சி தலை​வர் அர்​ஜுன் சம்​பத் தலைமை தாங்​கி​னார். ஆதீனங்​கள், ஆன்​மிக பேச்​சாளர்​கள் என திரளானவர்​கள் மாநாட்​டில் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சி​யில், அர்​ஜுன் சம்​பத் பேசி​ய​தாவது: தென் மாவட்​டங்​களில் வளர்ச்​சிக்கு சில மதத்​தினர் தடை​யாக இருக்​கிறார்​கள். கன்​னி​யாகுமரி குளச்​சல் துறை​முகத்தை தடுத்து நிறுத்​தி​னார்​கள்.

யாரை​யும் மத அடிப்​படை​யில் நாங்​கள் குற்​றம் சாட்​ட​வில்​லை. எல்​லோருமே ஆன்​மிகத்தை வளர்க்​கிறோம். அதில் மாற்​றுக் கருத்து இல்​லை. ஆனால், அவர்​களின் மத நிறு​வனங்​கள் யாருக்கு ஓட்டு போட வேண்​டும் என்​பதை தீர்​மானிக்​கிறார்​கள்.

அரசு நிர்​வாகம், அரசி​யல், நீதித் துறை​யில் தலை​யிடு​கிறார்​கள். இதெல்​லாம் அபாயகர​மான போக்​கு. இது தடுக்​கப்பட வேண்​டும். தமிழகத்​தில், சென்​னை, பூங்கா நகர் ரயில் நிலை​யத்​தில்

இந்தி எழுத்தை தார் பூசி அழித்​து​விட்​டால், இந்​தியை அழித்​து​ விடலாம் என நினைக்​கிறார்​கள். இந்தியை அழித்​து​விட்​டால் தமிழ் வளர்ந்​து​விடும் என நினைக்​கும் அவர்​கள் ஆபத்தானவர்கள்.

திராட மாடல் அரசை சார்ந்​தவர்​கள் ஆங்​கிலத்தை திணித்து தமிழ் மொழியை அழித்துக் கொண்​டிருக்​கிறார்கள். ஆனால், பிரதமர் மோடி ஆட்சி தமிழ் மொழியை திணிக்க கூடிய ஆட்​சி.கோயில் வளாகங்​களுக்கு உள்ளே அறநிலை​யத்​துறை அலு​வல​கங்​கள் இருக்​கக்​கூ​டாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்: 1,872 பறக்கும் படை, கண்காணிப்பு குழுக்கள் சோதனை தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in