தனித் தொகுதிகளில் போட்டியிடும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்​ வழக்கு

அர்ஜூன் சம்பத் | கோப்புப்படம்
அர்ஜூன் சம்பத் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பட்​டியல் இனத்​தவர்​களுக்​காக ஒதுக்​கப்​பட்ட தனித்​தொகு​திகளில் போட்​டி​யிடும் கிறிஸ்​தவ மதத்தைச் சேர்ந்தவர்​களின் வேட்​பு மனுவை நிராகரிக்கக் கோரி இந்து மக்​கள் கட்​சி​ தலை​வ​ர் அர்​ஜூன் சம்​பத்​,சென்னை உயர் நீதிமன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வரும் ஏப்​.23-ம் தேதி நடை​பெறவுள்​ளது. மொத்​தம் உள்ள 234 தொகு​தி​களில் 44 தொகு​தி​கள் பட்​டியல் இனத்​தவர்​களுக்​கான தனித்​தொகு​தி​களாக ஒதுக்​கப்​பட்​டுள்​ளன. இந்த தனித்​தொகு​தி​களில் இந்​து, சீக்​கி​யம் மற்​றும் பவுத்த மதங்​களை பின்​பற்​றும் பட்​டியல் இனத்​தவர்​களை மட்​டுமே போட்​டி​யிட அனு​ம​திக்க வேண்​டும். மதம் மாறிய பட்​டியல் இனத்​தவர்​களை போட்​டி​யிட அனு​ம​திக்​கக் கூடாது.

ஏனெனில், இந்​திய அரசி​யல் சாசனம் வகுத்​துள்ள பட்​டியல் இனத்​தவர்​களுக்​கான வரையறை​யில் இந்​து, சீக்​கி​யம் மற்​றும் பவுத்த மதங்​களை பின்​பற்​று​பவர்​களையே குறிப்​பிட்​டுள்​ளது. இதையே உச்ச நீதி​மன்​ற​மும் வலி​யுறுத்​தி​யுள்​ளது. தற்​போது 44 தனித்​தொகு​தி​களில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களில் 90 சதவீதம் பேர் கிறிஸ்​தவ மதத்தை பின்​பற்​று​பவர்​களாக உள்​ளனர்.

எனவே, வேட்​புமனு பரிசீலனை​யின்​போது தனித்​தொகு​தி​யில் போட்​டி​யிடு​பவர்​கள் எந்த மதத்தை சார்ந்​தவர்​கள் என்​பதை தீவிர​மாக ஆய்வு செய்​ய​வும், கிறிஸ்​தவ மதத்தை சேர்ந்த தனித்​தொகுதி வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்​களை நிராகரிக்​க​வும் தேர்​தல் அதி​காரி​களுக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் அவர் கோரி​யுள்​ளார். இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரவுள்​ளது.

அர்ஜூன் சம்பத் | கோப்புப்படம்
அமெரிக்கா தீவிர தாக்குதல்: அமைதிப் பேச்சு நடத்திய ஈரான் தலைவர் படுகாயம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in