மின் பகிர்மான கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி

மின் பகிர்மான கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி
Updated on: 
1 min read

சென்னை: மத்திய அரசின் தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்தின் தென் மண்டலப் பிரிவு மற்றும் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரன்டீஸ்) பெற விண்ணப்பிக்கலாம் 2022 முதல் 2026-ம் ஆண்டு வரை பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் (எலெக்ட்ரிகல் & எலெக்ட் ரானிக்ஸ் இன்ஜினீயரிங், எலெக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி) விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான அறிவிப்பு https://nats.education.gov.in/boat-srp.phb என்ற இணையதளத்தில் அக்.28-ல் வெளியிடப்படும். தகுதியுடைய நபர்கள் https://nats.education.gov.in என்ற இணையதளம் வாயிலாக நவ.28-க்குள் விண்ணப்பிக் கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

பயிற்சி பெறுவோருக்கு மாத உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி முடிந்து சான்றிதழ் வைத்திருப்போருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவது குறிப்பிடத் தக்கது.

மின் பகிர்மான கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி
அக்.25, நவ.1-ம் தேதிகளில் தமிழகத்தில் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in