ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமனம்: மின் வாரிய முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமனம்: மின் வாரிய முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு
Updated on: 
1 min read

சென்னை: ஒப்​பந்த முறை​யில் மின்​ கணக்​கீட்​டாளர்​களை நியமிக்க மின் வாரி​யம் முடிவு செய்​துள்ள நிலை​யில், அதற்கு தொழிற்​சங்​கத்​தினர் கடும் எதிர்ப்பை தெரி​வித்​துள்​ளனர்.

தமிழகத்​தில் 2.6 கோடிக்​கும் மேல் வீட்டு மின் இணைப்​பு​கள் உள்​ளன. இந்த இணைப்​பு​களில் மின்​சார பயன்​பாடு 60 நாட்​களுக்கு ஒரு முறை கணக்​கிடப்​படு​கிறது.

மின் வாரி​யத்​தின் மின்​கணக்​கீட்​டாளர் ஒவ்​வொரு இணைப்​புக்​கும் கணக்​கீட்​டுக்​கான செயலி மூலம் கணக்​கீடு செய்து நுகர்​வோரின் கணக்​கீட்டு அட்​டை​யில் பயன்​பாடு மற்​றும் கட்டண தொகையை பதிவு செய்​வார், செயலி மூலம் பதிவு செய்​யப்​பட்ட தரவு​கள் தானாக மின் வாரி​யத்​தின் தரவுத்​தளத்​தில் சேமிக்​கப்​படும்.

செயலி இல்​லாத போது கணக்​கீட்​டாளரே நேரடி​யாக கணக்​கீட்டு தரவுத்​தளத்​தில் பதிவு செய்​வார். இதனிடையே மின் வாரி​யத்​தில் போதிய அளவில் மின்​கணக்கீட்டாளர்கள் இல்லை என்​றும் 5 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​கள் இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதனால் பதவி உயர்வு பெற்ற கணக்​கீட்டு ஆய்​வாளர்​கள், கணக்​கீட்டு பணி​யில் ஈடுப்​படுத்​தப்​படு​கின்​றனர். குறை​வாக பணி​யாளர்​கள் இருப்​ப​தால் கணக்​கீட்​டில் தாமதம் ஏற்​படு​கிறது, இதனால் நுகர்​வோருக்கு மின் கட்​ட​ண​மும் அதி​கரிக்​கிறது. இந்​நிலை​யில் தனி​யார் நிறு​வனங்​கள் மூலம் ஒப்​பந்த முறை​யில் மின்​ கணக்​கீட்​டாளர்​கள் நியமிக்க மின் வாரி​யம் முடிவு செய்​துள்​ளது.

இது குறித்து அனைத்து மேற்​பார்வை பொறி​யாளர்​களுக்​கும் அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில், அடுத்த 6 மாதங்​களுக்கு தனி​யார் நிறு​வனத்​தின் மூலம் ஒப்​பந்த முறை​யில் தற்​காலிக​மாக கணக்​கீட்​டாளர்​களை நியமிக்​க​வும், எவ்​வளவு பணி​யாளர்​கள் தேவை என்​பதை பகுதி வாரி​யாக ஆராய்ந்​து, மேற்​பார்வை பொறி​யாளர்​களின் ஒப்​புதலுக்கு பின் ஒப்​பந்த பணி​களை மேற்​கொள்ள வேண்​டும் என கூறப்​பட்​டுள்​ளது.

இதனிடையே இந்த நடவடிக்​கைக்கு தொழிற்​சங்​கத்​தினர், எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். இது குறித்து மின் ஊழியர் மத்​திய அமைப்​பின் தலை​வர் கண்​ணன் கூறுகை​யில், “மின் கணக்​கீட்​டாளர்​களை ஒப்​பந்த முறை​யில் நியமிப்​பது சட்​ட​விரோத​மானது. இதை கண்​டித்து போராட்​டம் நடத்​தவுள்​ளோம்” என்றார்.

ஒப்பந்த முறையில் மின் கணக்கீட்டாளர்கள் நியமனம்: மின் வாரிய முடிவுக்கு தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு
பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை: அக்.11-ல் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in