செம்மண் முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு

செம்மண் முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
Updated on: 
1 min read

சென்னை: கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சராக க. பொன்முடி பதவி வகித்த போது, விழுப்புரம் மாவட்டத் தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் பொன்முடி உள்ளிட்டோர் மீது சட்டவிரோதப் பணப்பரிவர்த் தனை தடைச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கை விசாரி்த்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்ட அனைவரையும் வழக்கில் இருந்து விடுவித்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் 166 நாட்கள் காலதாமதமாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.லட்சுமி நாராயணன், இந்த மனுவுக்கு பொன்முடி உள்ளிட் டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத் துள்ளார்.

செம்மண் முறைகேடு வழக்கில் பொன்முடி விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு
தமிழகத்தில் அரசு கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்ய புதிய தேர்வு வாரியம்

X