குதிரை பேர விவகாரத்தில் மேலும் ஒருவர் சிக்கினார்: கரூர், கும்பகோணத்தில் நிதி நிறுவனங்களுக்கு சீல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

கரூர்: தவெக எம்​எல்​ஏ​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக மேலும் ஒருவர் சிக்கினார். மேலும் கரூர், கும்பகோணத்தில் நிதி நிறு​வனங்களில் போலீ​ஸார் சோதனை நடத்​தி சீல் வைத்​தனர்.

ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா தன்​னிடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாக அளித்த புகாரின்​பேரில், திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் ஜூன் 29-ம் தேதி வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். இந்த வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் வி.செந்​தில்​பாலாஜி மற்​றும் அவரது சகோ​தரர் அசோக்​கு​மா​ருக்கு தொடர்​புடைய​தாக கூறப்​படும் நிலை​யில், இரு​வரும் நீதி​மன்​றத்​தில் முன்​ஜாமீன் பெற்​றனர். இந்த வழக்​கில் மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டதுடன் ரூ.2.82 கோடி பறி​முதல் செய்​யப்​பட்​ட​தாக தெரி​விக்கப்பட்டுள்ளது.

இந்​நிலை​யில் இந்த வழக்​கின் விசா​ரணை அதி​காரி​யின் உத்​தர​வின்​பேரில், பணப்​பரி​மாற்​றம் நடை​பெற்​ற​தாக கூறப்​படும் கரூரைச் சேர்ந்த கனக​ராஜுக்கு சொந்​த​மான நிதி நிறு​வனத்​தில் லாலாபேட்டை போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இதேபோல், கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திலும் பந்தநல்லுார் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, நிதி நிறுவனத்தின் வரவு, செலவு,இருப்பு பதிவேடுகள், கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவற்றை சோதனை செய்து, சில ஆவணங்களை போலீஸார் எடுத்துச் சென்றனர்.

ரூ.56 லட்​சம் பறி​முதல்: இந்​நிலை​யில், மதுரையைச் சேர்ந்த ரங்​க​ராஜன் என்​பவரை பிடித்து திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் தற்​போது விசா​ரித்து வருகின்​றனர். அவரிடம் இருந்து ரூ.56 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. தொடர்ந்து விசா​ரணை நடை​பெறுகிறது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in